Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: பங்குச் சந்தையில் புதிய உச்சம் - சென்செக்ஸ் 83,000+, நிஃப்டி 25,400+ புள்ளிகளை கடந்தது...

இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 83,000+ புள்ளிகள், நிஃப்டி 25,400+ புள்ளிகள் என்ற புதிய உச்சம் கண்டன.

Stock News: பங்குச் சந்தையில் புதிய உச்சம் - சென்செக்ஸ் 83,000+, நிஃப்டி 25,400+ புள்ளிகளை கடந்தது...

Wednesday September 18, 2024 , 1 min Read

இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 83,000+ புள்ளிகள், நிஃப்டி 25,400+ புள்ளிகள் என்ற புதிய உச்சம் கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.18) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 130.24 புள்ளிகள் சரிந்து 82,949.42 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 37.75 புள்ளிகள் சரிந்து 25,380.80 ஆக இருந்தது.

இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டாலும், சில நிமிடங்களிலேயே மீண்டு ஏறுமுகம் கண்டது முதலீட்டாளர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 178 புள்ளிகள் (0.22%) உயர்ந்து 83,258 ஆகவும், நிஃப்டி 36 புள்ளிகள் (0.14%) உயர்ந்து 25,455 ஆகவும் புதிய உச்சம் கண்டிருந்தன.
bse

காரணம் என்ன?

அமெரிக்க ஃபெடரல் வங்கி விகிதத்தை குறைத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதன் முடிவு என்பது இன்று இரவு தெரிய வரும். அதையொட்டி, சர்வதேச சந்தைகளின் போக்குகள் வெகுவாக மாறக் கூடும்.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் பெரிதாக ஏற்றம், இறக்கமின்றி முடிவடைந்தது. ஆனால், ஆசிய பங்குச் சந்தைகளில் சற்றே பாதகப் போக்கு நிலவியது. எனினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

ஏற்றம் காணும் பங்குகள்:

ஹெச்டிஹெஃப்சி பேங்க்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

ஐசிஐசிஐ பேங்க்

எஸ்பிஐ

பாஜாஜ் ஃபைனான்ஸ் சர்வீஸ்

எல் அண்ட் டி

நெஸ்லே இந்தியா

ஐடிசி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

டைட்டன்

ஏசியன் பெயின்ட்ஸ்

சன் பார்மா

டாடா ஸ்டீல்

இன்போசிஸ்

விப்ரோ

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.71 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan