Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Stock News: கடும் சரிவில் இருந்து மீளத் தொடங்கியது பங்குச் சந்தை!

சர்வதேச பாதக போக்குகள், ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் கடும் வீழ்ச்சி கண்ட இந்தியப் பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது.

Stock News: கடும் சரிவில் இருந்து மீளத் தொடங்கியது பங்குச் சந்தை!

Tuesday January 14, 2025 , 1 min Read

சர்வதேச பாதக போக்குகள், ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் கடும் வீழ்ச்சி கண்ட இந்தியப் பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.14) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 449.48 புள்ளிகள் உயர்ந்து 76,535.24 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 141.25 புள்ளிகள் உயர்ந்து 23,227.20 ஆக இருந்தது.

பங்குச் சந்தையில் நேற்றைய தினம் கடும் வீழ்ச்சியை சந்தித்து பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டு வருவது முதலீட்டாளர்களிடையே நிம்மதியைத் தந்துள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 191.18 புள்ளிகள் (0.25%) உயர்ந்து 76,521.19 ஆகவும், நிஃப்டி 75.45 புள்ளிகள் (0.33%) உயர்ந்து 23,161.40 ஆகவும் இருந்தது.
sensex

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகத்தில் கலவையான போக்குதான் நிலவியது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. டோக்கியோ பங்குச் சந்தை மட்டும் இறங்குமுகம் கண்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்தியப் பங்குச் சந்தையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அத்துடன், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சற்றே மீண்டுள்ளதால் பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது.

ஏற்றம் காணும் பங்குகள்:

என்டிபிசி

டாடா ஸ்டீல்

எஸ்பிஐ

டாடா மோட்டார்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

சன் பார்மா

ஹெச்டிஎஃப்சி பேங்க்

விப்ரோ

பாரதி ஏர்டெல்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஏசியன் பெயின்ட்ஸ்

கோடாக் மஹிந்திரா பேங்க்

ஐடிசி

நெஸ்லே இந்தியா

டிசிஎஸ்

இன்ஃபோசிஸ்

டைடன் கம்பெனி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 21 பைசா உயர்ந்து ரூ.86.49 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan