Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ரூ.500 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு PIN தேவையில்லை: Paytm அறிமுகம் செய்த UPI LITE Auto Top-up

UPI LITE ஆட்டோ டாப்-அப் அம்சம் உணவு, போக்குவரத்து மற்றும் வழக்கமான சிறிய கொள்முதல் போன்ற தினசரி செலவுகளுக்கு ஏற்ற ஒரு பேமெண்ட் வடிவமாகும். வங்கிக் கணக்கிலிருந்து எடுக்காமல் UPI LITE இருப்பிலிருந்தே நேரடியாகப் பணம் செலுத்தலாம்.

ரூ.500 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு  PIN தேவையில்லை: Paytm அறிமுகம் செய்த UPI LITE Auto Top-up

Monday November 25, 2024 , 2 min Read

ரூ.500க்கு கீழ் தொகை கொண்ட பரி வர்த்தனைகளுக்கு PIN இல்லாமல் பணம் செலுத்துவதற்கு Paytm 'UPI LITE Auto Top-up' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

UPI LITE ஆட்டோ டாப்-அப் அம்சம் உணவு, போக்குவரத்து மற்றும் வழக்கமான சிறிய கொள்முதல் போன்ற தினசரி செலவுகளுக்கு ஏற்ற ஒரு பேமெண்ட் வடிவமாகும். வங்கிக் கணக்கிலிருந்து எடுக்காமல் UPI LITE இருப்பிலிருந்தே நேரடியாகப் பணம் செலுத்தலாம்.

யுபிஐ லைட் இருப்பிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குக் கீழே இருப்பு குறையும் போது, இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தானே ரீசார்ஜ் செய்யும் தெரிவைச் செயல்படுத்துகிறது. இது அடிக்கடி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு விரைவாகவும் தடையின்றியும் பணம் செலுத்துகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் ரூ.500 வரை செல்லலாம், தினசரி உச்ச வரம்பு ரூ.2,000 மட்டுமே.

Paytm upi lite

இது தொடர்பாக பேடிஎம் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,

“Paytm UPI லைட்டில் தானியங்கி டாப்-அப் அறிமுகம் தினசரி பேமெண்ட்டுகளை விரைவாகவும் தடையின்றியும் செய்கிறது. நம் தினசரி பழக்கவழக்கமான தேநீர் அருந்துதல் உணவு முதல் ஆட்டோ, மெட்ரோ மற்றும் பஸ் சவாரிகள் வரை அனைத்து பரிவர்தனைகளுக்கும் உகந்ததாக உள்ளது. இதனால் சிறுசிறு பரிவர்த்தனைகள் மூலம் வங்கி ஸ்டேட்மெண்ட்டை கிளீன் ஆக வைத்துக் கொள்ள உதவுகிறது. சிறிய, அடிக்கடி நடக்கும் பரிவர்த்தனைகள் மற்ற பிரதான வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளை விடவும் அதிகமில்லாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது,” என்றார்.

அதாவது, இந்தச் சிறுசிறு பரிவர்த்தனைகள் வங்கி பரிவர்த்தனை அட்டவணையில் இடம்பெறாது. பயனர்கள் தங்கள் UPI பரிவர்த்தனைகளின் விரிவான அறிக்கையையும் பதிவிறக்கம் செய்து, தங்கள் செலவினங்களை எளிதாகக் கண்காணிக்கலாம்.

தற்போது, ​​யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கிக் கணக்குகளைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு ஆட்டோ டாப்-அப் அம்சம் கிடைக்கிறது. விரைவில் பல வங்கிகளுக்கு இந்த அம்சத்தை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாக பேடிஎம் தெரிவித்துள்ளது.

Paytm இப்போது UAE, சிங்கப்பூர், பிரான்ஸ், மொரிஷியஸ், பூட்டான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச இடங்களுக்கு UPI கட்டணங்களை அனுமதிக்கிறது. வெளிநாட்டில் ஷாப்பிங், டைனிங் மற்றும் பிற உள்ளூர் நடவடிக்கைகள் தொடர்பான கட்டணங்களுக்கு இந்திய பயணிகள் பேடிஎம் பயன்படுத்த முடியும்.

இந்த அம்சத்தைச் செயல்படுத்த, பயனர்கள் தங்கள் UPI-ஐடியை தங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்து ஒன் டைம் செட்-அப்-ஐ நிறைவு செய்ய வேண்டும். ஒரு முறை இது முன்பே இயக்கப்படவில்லை என்றால், சர்வதேச பயணத்தின் போது Paytm தானாகவே செயல்படுத்தச் செய்யும்.

இந்த புதிய அம்சங்கள் இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) சமீபத்திய ஒப்புதலுக்குப் பிறகு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.