Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'பேஷன் டு புரபஷன்' - ஐடி பணியை விட்டு நடன வீடியோ கிரியேட்டர் ஆகி பிரபலமாகிய ஜோடி!

இணையத்தின் அபரிமிதமான வளர்ச்சி மக்களை கார்ப்பரேட் உலகில் சிக்கி பலகை அறைகளுக்குள் மாட்டிக்கொள்வதிலிருந்து பிழைக்கச்செய்து, அவர்களின் படைப்புத்திறன்களையே பணமாக்குவதற்கான வாய்ப்பு கதவுகளை வழங்கியுள்ளது. அதற்கு இன்றைய இணைய பிரபலங்களும் அவர்களது வளர்ச்சியுமே சாட்சி. அப்படியொரு நடனஜோடியான 'ஜோடி அனுாரப

'பேஷன் டு புரபஷன்' - ஐடி பணியை விட்டு நடன வீடியோ கிரியேட்டர் ஆகி பிரபலமாகிய ஜோடி!

Tuesday January 16, 2024 , 3 min Read

இணையத்தின் அபரிமிதமான வளர்ச்சி மக்களை கார்ப்பரேட் உலகில் சிக்கி பலகை அறைகளுக்குள் மாட்டிக்கொள்வதிலிருந்து பிழைக்கச் செய்து, அவர்களின் படைப்புத் திறன்களையே பணமாக்குவதற்கான வாய்ப்பு கதவுகளை வழங்கியுள்ளது. அதற்கு இன்றைய இணைய பிரபலங்களும் அவர்களது வளர்ச்சியுமே சாட்சி. 9 டூ 5 கட்டாய அலுவலக பணி மேற்கொண்டாலே வசதியான வாழ்க்கையை வாழலாம் என்னும் நிலையை அழித்துவிட்டது இணையம்.

"அமைதியாகவும் ஆனால் வியத்தகு சமூகப் புரட்சியை" இணையம் எப்படி உருவாக்கியது என்பதை வியந்து, டுவிட்டரில் பதிவு செய்திருந்த தொழிலதிபரும் கோடீஸ்வரருமான ஆனந்த் மஹிந்திரா அப்பதிவில், நன்ஊதியம் அளிக்கும் ஐடி வேலையை உதறித்தள்ளி பேஷனான நடனத்தை இணையத்தின் உதவியால் புரபஷனாக்கி கொண்ட தம்பதியினரை உதாரணம் காட்டியிருந்தார்.

jodianoorabh

"சில தசாப்தங்களுக்கு முன்பு, அனோஷா மற்றும் சௌரப் தம்பதியினர் அவர்களது பெற்றோர்களிடம், நல்ல ஊதியம் அளிக்கும் கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு நடனக் கலைஞர்களாக ஆக விரும்புவதாகச் சொல்லியிருந்தால், குடும்பத்தார் மற்றும் சுற்றத்தார் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்தையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டிருப்பார்கள்.

”ஆனால், சமூக ஊடகங்களின் சக்தியால், இவர்களைப் போன்ற திறமையானவர்கள் அவர்களின் ஆர்வத்திலிருந்தே லாபம் ஈட்ட வழிகிடைத்துள்ளது. இணையத்தின் வளர்ச்சியால் வியத்தகு சமூகப் புரட்சி நடந்துள்ளது" என்று மெய்சிலிரித்து பதிவிட்டிருந்தார்.

சமூகஊடகத்தை நன்விதத்தில் பயன்படுத்தி பலன் பெற்று, ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தைப் பெற்ற அந்த ஜோடி அனோஷா மற்றும் சௌரப். இணையத்தில் ஜோடி அனுாரப் எனும் பெயரால் பரீட்சயமான இந்த ஜோடி, இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியுப்பில் 1 மில்லியன் ஃபாலோயர்களுடன், பதிவிடும் பெரும்பாலான வீடியோக்களுக்கு மில்லியன் வீயூஸ்களை அள்ளி வருகின்றனர்.

கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்த அனுஷா, பெங்களூரில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொடார். மகாராஷ்டிராவின் ஜபல்பூரைச் சேர்ந்த சௌரப், கல்லுாரி படிப்பை முடித்தபின் பெங்களூரில் சாஃப்டவேர் இன்ஜீனியராக பணிபுரிந்துள்ளார். இருவரும் இரு வெவ்வேறு நகரங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், இருவருக்கும் நடனத்தின் மீது காதல் கொண்டிருந்துள்ளனர்.

2015ம் ஆண்டு டேட்டிங் ஆப் மூலம் சந்தித்தபோது இருவரும் நடனத்தின் மீதான பரஸ்பர அன்பைப் பகிர்ந்து கொள்ளவில்லை. டேட்டிங் செய்யத் தொடங்கிய பிறகு அவர்களிடையே பிணைப்பை உருவாக்க உதவியதும் இதே நடனக்கலை தான்.

சௌரப் அவரது யூடியூப் சேனலில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நடன வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். சௌரப் ஐஐடி பாம்பேயில் படித்து கொண்டிருந்த சமயத்தில் அவருக்கிருந்த மேடை பயத்தைப் போக்குவதற்காக நடனம் ஆட ஆரம்பித்தார். பின்னாளில், அந்தார்வம் பெருக்கெடுத்ததில் கல்லூரி ஹிப்-ஹாப் நடனக் குழுவை வழிநடத்தி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார்.

Jodi Anoorabh

மறுபுறம், அனோஷா அவரது வாழ்நாளின் பெரும்பகுதியில் நடனக் கலைஞராக இருந்துள்ளார். பள்ளிப் பருவத்தில் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் நடனமாடும் மாணவிகளில் ஒருவராக இருந்தார். அவர்கள் சந்தித்த உடன் இருவரும் இணைந்து நடனமாடவில்லை.

கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பிலிருந்துதான் இருவரும் இணைந்து நடனமாடி அவ்வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடத் தொடங்கினர். அங்கிருந்து 'ஜோடி அனுாரப்'-ன் பயணம் துவங்கியது. இன்று இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் பேரும், யூடியுப்பில் 10 லட்சம் பேரும் பின்தொடர்ந்து, அவர்களது புரபஷனையே நடனமாடுவதாக மாறி வருமானமும் ஈட்டி வருகின்றனர்.

Jodi Anoorabh உருவாகியது எப்படி?

"2020ம்ஆண்டு பிப்ரவரி மாதம் ஹனிமூனுக்கு செல்லும்போது தான் இன்ஸ்டாகிராமில் 'ஜோடி அனுாரப்' என்ற பெயரில் கணக்கைத்தொடங்கினோம்.

“தொடர்ந்து வந்த லாக்டவுன் வீட்டிலே எங்களை முடக்கியது. அப்போது கிடைத்த அதிக நேரத்தில் நடனமாடி வீடியோவை பதிவிட்டோம். அது எங்களையும் ஆன்லைனில் எங்களைப் பார்த்தவர்களையும் மகிழ்ச்சியாக ஆக்கியது, அதுவே எங்களை உற்சாகப்படுத்தியது" என்கிறார் செளரப்.

சினிமாப் பாடல்களுக்கு அவர்களே கொரியோகிராப் செய்து நடனமாடி, யூடியுப்பில் அப்லோடும் ஒவ்வொரு ஷார்ட்ஸ் வீடியோவும் பல மில்லியன் வீயூஸ்களை அள்ள தவறுவதில்லை. சமீபத்தில் ஷாரூக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வெளியாகிய ஜவான் படத்தில் இடம்பெற்ற 'சலேயா' பாடலுக்கு பாரிசின் ஈபிள் டவர் முன் நின்று நடனமாடி பதிவேற்றியிருந்தனர். கிட்டத்தட்ட 2 கோடி பார்வையாளர்களை ஈர்த்த அந்த வீடியோ ஷாரூக்கானை ஈர்த்து, டுவிட்டரில் பாராட்டி பகிர்ந்திருந்தார்.

jodianoorabh

ஸ்லோ அண்ட் கிரேஸ்ஃபுல்லான நடன அசைவுகளே இவர்களது சிக்னச்சர். அது போன்றதொரு ஸ்டைலில் 'மணிகே மகே ஹிதே' எனும் சிங்கள மொழி பாடலுக்கு அவர்கள் கொரியோகிராப் செய்து வெளியிட்டு, புதிய டிரெண்ட்டை உருவாக்கினர். சாமானியர்கள் தொடங்கி பல பிரபலங்களும் அவர்களது நடன அசைவுகளை நடனமாடி வீடியோ பதிவு செய்தனர்.

"டிரெண்டிங் வீடியோக்கள் ஃபன்னுக்காக மட்டுமே தவிர அதை அசல் நடனத்துடன் ஒப்பிட முடியாது. உதாரணத்துக்கு, பரதநாட்டியத்தை அனைவராலும் ஆட முடியாது. ஆனால், அதை கற்றுக் கொள்வதற்கு அதிக பயிற்சியும், காலமும் தேவை என்பதை அனைவரும் அறிவர். நீண்ட நிமிட நடனவீடியோக்களை உருவாக்குவது கடினமான ஒன்றாகும்.

”அதே சமயம், இப்போது டிரெண்டில் இருக்கும் இந்த குறுகிய வீடியோக்களையும் உருவாக்குவதும் எளிதல்ல. நீண்ட ஆண்டுகளாக கற்றுவரும் ஒரிஜினல் நடன வடிவமும், டிரெண்டிங் நடன அசைவுகள் இரண்டையுமே நாங்கள் விரும்புகிறோம். நடனக்கலைஞர்கள் திறமைகளை வளர்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களை நிரூபித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன," என்று நியூஸ் கர்நாடகாவிடம் தெரிவித்தார் செளரப்.