டாடா அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்கும் நோயல் டாடா!
ரத்தன் டாடா புதன் கிழமை இயற்கை எய்தியதை அடுத்து நோயல் டாடா , அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்படுகிறார்.
டாடா அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும், மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாட்டா, 40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழுமத்தில் பணியாற்றி வருபவர், பல்வேறு பொறுப்புகளை வகித்து முன்னேறி வந்திருக்கிறார்.
நோயல் டாடா (67), அதிகம் வெளிச்சத்திற்கு வராதவராக செயல்பட்டிருக்கிறார். நன்கறிப்பட்ட தனது சகோதரர் ரத்தன் டாடாவின் நிழலில் பணியாற்றி வந்திருக்கிறார். இப்போது அவர், சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் இதர அறக்கட்டளைகள், சர் டொரப்ஜி டாடா அறக்கட்டளைகள் மற்றும் இதர அறக்கட்டளைகளை உள்ளடக்கிய டாடா அறக்கட்டளையின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.
இந்த அறக்கட்டளை தான், டாடா குழும் நிறுவனங்களை இயக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66 சதவீத பங்குகள் கொண்டுள்ளது. ரத்தன் டாடா மற்றும் டொரப்ஜி டாடா அறக்கட்டளை இயக்குனர் குழுவில் அவர் அறங்காவலராக இருக்கிறார்.
ரத்தன் டாடா புதன்கிழமை இயற்கை எய்தியதை அடுத்து நோயல் டாடா , அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்படுகிறார். நவல் டாடா மற்றும் சிமோனே டாடாவின் மகனான நோயல், டிரெண்ட், டாடா இண்டர்நேஷனல், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மண்ட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட டாடா குழும நிறுவனங்களில் இயக்குனர் குழுக்களில் பொறுப்பு வகிப்பதோடு, டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனத்தில் துணை தலைவராக இருக்கிறார்.
நோயல் டாடா, 40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழும நிறுவனங்களில் தொடர்பு கொண்டிருக்கிறார். டாடா குழுமத்தின் வர்த்தக மற்றும் விநியோக பிரிவான டாடா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 2010 முதல் 2021 வரை பொறுப்பு வகித்திருக்கிறார்.
500 மில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலர் கொண்டதாக நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். டாடா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன்னதாக அவர் டிரெண்ட் நிறுவன நிர்வாக இயக்குனராக பதவி வகித்தார்.
1998ல் ஒரு விற்பனை நிலைய நிறுவனத்தில் இருந்து, 700 விற்பனை நிலையங்கள் கொண்டதாக நிறுவனம் வளர்ச்சி பெற்றதில் இவரது பங்கு முக்கியமானது. சசெக்ஸ் பல்கலை பட்டதாரியான நோயல் டாடா, INSEAD – ல் சர்வதேச எக்ஸிகியூட்டிவ் திட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan