Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘NO OIL, NO BOIL’ - நோ எண்ணெய், நோ அடுப்பு: 2000 இயற்கை உணவு ரெசிப்பிகள் வழங்கும் ‘படையல் சிவா’

இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும், இயற்கை உணவுப் பொருள்களை அப்படியே உண்ண வேண்டும் அதுவே ஆரோக்கியம். ஆனால் பெரும்பாலான இயற்கை உணவுப் பொருள்களை அப்படியே உண்ண முடியாது. பச்சை வாடை அடிக்கும். எனவே அடுப்பின்றி, எண்ணெய் இன்றி சுவையான இயற்கை உணவு தயாரிக்கும் முறையை உருவாக்கி படையல் நடத்தி வருகிறார் சிவா.

‘NO OIL, NO BOIL’ - நோ எண்ணெய், நோ அடுப்பு: 2000 இயற்கை உணவு ரெசிப்பிகள் வழங்கும் ‘படையல் சிவா’

Monday May 17, 2021 , 4 min Read

NO OIL, NO BOIL: எண்ணெயின்றி, அடுப்பின்றி 2000 ரெசிப்பிகளுக்கு மேல் இயற்கை உணவுகளை வழங்கும் படையல் சிவா


இன்றைய நவநாகரீக உலகில் மனிதனின் பல்வேறு பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் உணவு. நேரம் தவறி உண்பது, ரசாயனப் பொருள்கள் மற்றும் வேதிப் பொருள்களை சுவைக்காக உண்பது, கிடைப்பதையெல்லாம் உண்பது என உடல் பருமன், மாரடைப்பு, ஓவ்வாமை, அலர்ஜி என அனைத்து உடல் உபாதைகளையும் இருகரம் நீட்டி வரவேற்கிறோம் என்பதை மறுப்பாரில்லை.


இந்நிலையை மாற்ற வேண்டும், இயற்கை உணவுகளை இயற்கையான முறையில் உண்ண வேண்டும். நமது வீட்டின் அடுப்படியே மருத்துவமனையாக மாறி, உணவுகளே மருந்தானால், நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை படையல் சிவாவின் கருத்து.

சிவா

படையல் சிவா இயற்கை உணவு வகைகளுடன்

கோவையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரை அப்பகுதியினர் படையல் சிவா என்றே அடைமொழியுடன் அழைக்கின்றனர். பிகாம் வரை படித்துள்ள இவருக்கு, சிறுவயது முதலே சமையல் கலையில் மிகுந்த ஆர்வம். கூடவே ஆன்மிக நாட்டமும் அதிகம் என்பதால் குடும்பத்தினர் அசைவ உணவு சாப்பிட்டாலும், தான் மட்டும் சைவ உணவை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சைவ உணவுப் பிரியராக இருந்த இவர், நம்மாழ்வாரின் சீடராக மாறிய பின் அவரது கருத்துக்களை பின்பற்றி இயற்கை உணவுகளை உண்பதற்கு பழகியுள்ளார்.

இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும், இயற்கை உணவுப் பொருள்களை அப்படியே உண்ண வேண்டும் அதுவே ஆரோக்கியம். ஆனால் பெரும்பாலான இயற்கை உணவுப் பொருள்களை அப்படியே உண்ண முடியாது என்பதால், அடுப்பில் வேக வைக்காமல், எண்ணெய் சேர்க்காமல் பச்சைக் காய்கனிகள், பழங்கள், தானியங்கள், உலர் பழங்கள் உள்ளிட்ட ஆர்கானிக் முறையில் பயிரிடப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களையும் சமைக்காமலேயே அவற்றின் சத்து குறையாமல் சுவையாக உருவாக்கி, ஓர் விருந்தே வைக்க முடியும் என்கிறார் படையல் சிவா.
padayal

இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது, வீதியெங்கும் வேண்டும் ஓர் இயற்கை உணவகம் எனும் நம்மாழ்வாரின் கொள்கையில் மிகுந்த பிடிப்புள்ளவன் நான். இயற்கை உணவுகள்தான் மிகுந்த சத்தளிப்பவை. வெறும் இயற்கை உணவுகளை மட்டும் 3 வேளையும் உணவாக உட்கொண்டு வந்தால், உடல் பொலிவடைவது மட்டுமன்றி மனமும் தெளிவடையும். ஆனால் இயற்கை உணவுகள் அனைவருக்கும் பிடிப்பதில்லை. அதற்குக் காரணம் பச்சைக் காய்கனிகள் மற்றும் இயற்கை உணவுகளில் உள்ள பச்சை வாடை மற்றும் அவற்றின் சுவை.

எனவே இந்த பச்சைக் காய்கனிகள் மற்றும் பழங்கள் போன்ற இயற்கையில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருள்களையும் கொண்டு, நாம் ஏன் ஓர் விருந்தே தயார் செய்யக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் நான் NO OIL, NO BOIL என்ற கொள்கையோடு, எண்ணெய் இல்லாமல் அடுப்பில்லாமல் சமைக்கும் கலையை கற்றுக் கொண்டேன் என்கிறார்.
படையல்

இதற்காக இவர் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிவகாசி போன்ற பல்வேறு இடங்களில் இதுபோல அடுப்பில்லாமல் சமைப்பவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார். மேலும்,

”அடுப்பு இல்லாமல், எண்ணெய் இல்லாமல் சமைப்பது தொடர்பாக ஓராண்டாக ஆராய்ச்சி செய்து மேலும் பல விசயங்களைக் கண்டறிந்துள்ளார். இரண்டே ஆண்டுகளில் 30 வகை ரெசிப்பிகளை செய்யும் அளவுக்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். தற்போது இவர் NO OIL, NO BOIL முறையில் 2 ஆயிரம் ரெசிப்பிக்கள் தயாரிக்கும் அளவுக்கு தனது திறமையை வளர்த்திருக்கிறார்.”

2014ல் தொடங்கி, தற்போது வரை வெறும் இயற்கை உணவுகளை மட்டுமே தயாரித்து உண்டு வரும் இவர், தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கோவை, சிங்காநல்லூரை அடுத்துள்ள தியாகி என்.ஜி.ஆர். நினைவுப் பள்ளி அருகே படையல் எனும் இயற்கை உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

படையல்

படையல் உணவகத்தில் உணவருந்துவோர்.

நோ ஆயில் நோ பாயில் என்ற கொள்கையுடன் இயங்கி வரும் இந்த உணவகத்தில் அடுப்பு கிடையாது, எண்ணெய் கிடையாது, முழுக்க முழுக்க மனித சக்தியால் காய்கனிகள், பருப்பு வகைகள், அரிசி வகைகளைக் கொண்டு இயற்கை உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதே இதன் சிறப்பம்சம்..


எங்கள் இயற்கை உணவகத்தில் அடுப்பே இல்லாமல் சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், அவியல், பொரியல், வடை, பாயாசம் என ஓர் விருந்தே ரூ. 100 முதல் ரூ. 150க்குள் கிடைக்கும். ரூ.20 முதல் 50 வரையில் பல்வேறு விதமான பழச்சாறுகள் கிடைக்கும். அவல் இட்லி 1 செட் 40 ரூபாய்தான். இங்கே சோறு என்பது இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரியமிக்க அரிசி வகைகளான கிச்சிலி சம்பா, தூயமல்லி, சீரக சம்பா, இலுப்பைபூ சம்பா அரிசியின் அவல்தான். இதனை தேங்காய் பாலில் ஊற வைத்தால் பூப்போன்ற சாதம் தயார்.


சாம்பாருக்கான பருப்பை அரைத்து, அதனுடன் முந்திரி, பாதாம்பருப்பு பொடிகளைச் சேர்த்து, புளிப்புக்காக எலும்பிச்சை சாறு சேர்த்து தயார் செய்தால் மணமணக்கும் சாம்பார் ரெடி. இதேபோல, புளி மிளகாய் சேர்க்காத காரக் குழம்பு, பசுமஞ்சள் ஊறுகாய், 12 மணி நேரம் ஊறவைத்த தேங்காய்ப்பால் தயிர் என பல சிறப்பு மெனுக்கள் உண்டு.

படையல்1

எல்லாவற்றுக்கும் மேலாக பாதாம் பிசினை ஊறவைத்து முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து தயாரித்த பாயாசத்துடன், வாழைப்பூ வடை என வாழை இலை அல்லது பாக்கு மட்டையில் வாடிக்கையாளர்களுக்கு சுவையான மணமான ஓர் விருந்தே தயாரித்து பரிமாறி வருகிறோம். தற்போது கொரானோ காலத்தில் பாக்கு மட்டைகளில் செய்யப்பட்ட சிறிய பெட்டிகளில் பார்சல் செய்து தருகிறோம் என்கிறார்.


நாளொன்றுக்கு சுமார் 75 பேர் இந்த இயற்கை உணவை ருசி பார்க்க வருகின்றனர். இதே வார இறுதி நாள்களில் சுமார் நூறுக்கும் அதிகமானோர் வருவார்கள் எனக் கூறும் சிவக்குமார். தனது குழுவினர் சுமார் 10 பேருடன் சேர்ந்து இந்த படையல் இயற்கை உணவகத்தை நடத்தி வருகிறார்.

அடுப்போ, மற்ற இயந்திரங்களின் உதவியோ இன்றி முழுக்க முழுக்க மனித சக்தியால் இந்த உணவகம் இயங்கி வருவதால், நாள் முழுவதும் சரியான வேலை இருக்குமாம். லாபம் பெரிய அளவில் இல்லையென்றாலும், மக்களுக்குத் தரமான இயற்கை உணவு வகைகளை சுவையாக வழங்கினோம் என்ற திருப்தி கிடைக்கிறது என்கிறார்.
சிவா1

இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சியளிக்கிறார் படையல் சிவா

இவரது இயற்கை உணவு ஆராய்ச்சிகளை அங்கீகரித்து குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் சிவக்குமாருக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவை குமரகுர தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்கை உணவின் மகத்துவமும், மருத்துவமும் என்ற சிறப்புப் பாடத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


எல்லாவற்றுக்கும் மேலாக 2019 ஜனவரியில் 3.30 நிமிடங்களில் 300 மாணவர்களைக் கொண்டு 300 வகையான இயற்கை உணவுகளை தயாரித்து உலகச் சாதனை படைத்து இயற்கை உணவுகளின் அவசியத்தை உலகுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார் படையல் சிவா.


இதுவரை திருமணம், சீர், பிறந்தநாள் என பல்வேறு விழாக்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு விருந்து படைத்துள்ளார். பள்ளி, கல்லூரிகள் உள்பட சுமார் 250க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சியளித்துள்ளார்.

சிவா3

அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல், சத்து குறையாமல், அழியாமல், வகை வகையாய், வண்ணமயமாய், எவ்வித ரசாயன சேர்க்கையின்றி, சுவையுடன் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் வகையில் சுமார் 2 ஆயிரம் ரெசிப்பிக்களை தற்போது வரை நான் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளேன்.

நான் தெரிந்து கொண்டவற்றை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக மிக எளிமையாக, இயற்கை முறையில் அடுப்பில்லாமல் சமைக்கலாம் வாங்க என்று பயிற்சி வகுப்புகளை நாடெங்கும் நடத்தி வருகிறேன். தினசரி ஓரு வேளையாவது அனைத்து மக்களும் இயற்கை உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதே எனது லட்சியமாகும் என்கிறார் படையல் சிவா.

இயற்கை உணவுப் பயிற்சிக்கு மற்றும் தொடர்புக்கு: படையல் இயற்கை உணவகம்

செல்: 87546 89434, 86374 10022.