Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

உலகையே அதிரவைத்த 'DeepSeek' - ChatGPT-க்கு சவால் விடும் சீன ஏஐ செயலி உருவானது எப்படி?

சீனாவில் இருந்து உருவான டீப்சீக் ஏஐ செயலி இணைய உலகில் சூறாவெளியாக அறிமுகமாகி, அமெரிக்க தொழில்நுட்பத் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செயலியின் பின்னணியும், இதனால் ஏஐ உலகில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றியும் ஒரு பார்வை.

உலகையே அதிரவைத்த 'DeepSeek' - ChatGPT-க்கு சவால் விடும் சீன ஏஐ செயலி உருவானது எப்படி?

Friday January 31, 2025 , 3 min Read

இணைய உலகில் பயனாளிகள் பரிசோதிக்கவும் பயன்படுத்தவும் இன்னொரு ஏஐ செயலி அறிமுகம் ஆகி, உலகமெங்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதுதான் 'DeepSeek' எனும் அந்த ஏஐ செயலி பயனாளிகளின் ஆர்வத்தை ஈர்த்திருக்கும் அதே நேரத்தில், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியையும், அமெரிக்க அரசாங்கத்தையும் திகைக்க வைத்துள்ளது.

இந்த செயலி ஏற்படுத்திய தாக்கத்தினால், பங்குச்சந்தையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல், ஏஐ பரப்பில் அமெரிக்காவுக்கே சவால் விளங்கக் கூடியதாக டீப்சீக் கருதப்படுகிறது.

சாட்ஜிபிடி, கிளாடு, லாமா, கிராக் உள்ளிட்ட ஏஐ சேவைகள் பற்றியே பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில், சீனாவின் பெயர் தெரியாத இந்நிறுவனம் தொழில்நுட்ப உலகையே திரும்பி பார்க்க வைத்துக்கிறது.

AI

சீனாவின் சாட்பாட்

சுருக்கமாக சொல்வது என்றால் சாட்ஜிபிடி அறிமுகமான பிறகு, அதே போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் செயலியாக 'டீப்சீக்' சேவை அமைகிறது. சாட்ஜிபிடி போலவே, உருவாக்கியுள்ள டீப்சீக் ஆர்1 செயலியும் ஏஐ திறன் கொண்ட சாட்பாட் தான். இந்த சாட்பாட்டிடமும் கேள்வி பதில் வடிவில் உரையாடி தகவல்களை பெறலாம். ஏஐ உதவியாளர் போல பயன்படுத்தலாம்.

சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள் போலவே டீப்சீக் சாட்பாட்டும் திறன் பெற்றிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது. அமெரிக்காவில் ஜனவரி மாதம் சத்தம் இல்லாமல் அறிமுகமான நிலையில் இந்த சாட்பாட், ஆப் ஸ்டோர் தரவிறக்கத்தில் முன்னிலை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.

டவுன்லோடு வசதி

டீப்சீக் இடைமுகமும் சாட்ஜிபிடி போலவே உள்ளது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயலி வடிவில் இதை எளிதாக பயன்படுத்தலாம். இலவச சேவை என்றாலும், புதிய உறுப்பினர்களுக்கு காத்திருப்பு பட்டியல் உண்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. பயனாளிகள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்கள் உரையாடலை சேமிக்கும் தன்மை கொண்டிருக்கிறது.

மற்ற ஏஐ சாட்பாட்கள் போலவே, டீப்சீக் சாட்பாட்டும், மொழி மாதிரி நுட்பத்தை கொண்டு, ஏகப்பட்ட தரவுகளை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடியதாக இருக்கிறது. ஜூலை மாதம் வரையான தரவுகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சாட்பாட்டை பயனாளிகள் பயன்படுத்தலாம் என்பதோடு, யார் வேண்டுமானாலும் இதன் பின்னே உள்ள மொழி மாதிரியையும் டவுன்லோடு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த வகையில் ஓபன் சோர்ஸ் தன்மை பெற்றுள்ளது. சாட்ஜிபிடி பின்னே உள்ள மொழி மாதிரியை கட்டணம் செலுத்தியே அணுக முடியும்.

ஐ

ஏன் பரபரப்பு?

டீப்சீக் செயலியை பலரும் பயன்படுத்தி சாட்ஜிபிடியுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். அதில் வரும் பல பதில்கள் திருப்தி அளித்தாலும், அரசியல் நோக்கிலான கேள்விகளுக்கான பதில்கள் தணிக்கை செய்யப்பட்டு்ள்ளன. உதாரணமாக 'சீனாவில் மக்கள் போராட்டத்தின் அடையாளமான தியானமன் சதுக்கம்' தொடர்பான கேள்விக்கு, இந்த செயலி பதில் அளிக்கவில்லை.

பயனாளிகள் கருத்து ஒரு பக்கம் இருக்க, இந்த செயலி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியிலும், அரசு அளவிலும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடிக்கு நிகரான சாட்பாட் தொழில்நுட்பத்தை சீன நிறுவனம் உருவாக்கியிருப்பது மட்டும் அல்ல இதற்கான காரணம். இந்த நுட்பத்தை சொற்பமான செலவில் டீப்சீக் உருவாக்கியிருப்பது தான்.

ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் ஏஐ சேவைகளை உருவாக்க பில்லியன் கணக்கில் டாலர்களை செலவிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், டீப்சீக் தனது சாட்பாட்டை 5.6 மில்லியன் டாலரில் உருவாக்கியிருப்பதாக சொல்ல அசர வைத்துள்ளது.

அமெரிக்கா தடை

அது மட்டும் அல்ல, ஏஐ சேவைகள் உருவாக்க அதி தீவிர சிப்கள் மற்றும் வன்பொருள் தேவை என்று சொல்லப்படுவதையும் டீப்சீக் பொய்யாக்கியுள்ளதாக கருதப்படுகிறது. ஏஐ சேவைகள் பின்னணியில் உள்ள மொழி மாதிரிகள் உள்ளிட்டவை செயல்பட பெருமளவு தரவுகளை கையாள வேண்டியிருப்பதால், இதற்கு பெரும் ஆற்றல் கொண்ட சிப்களும், வன்பொருள்களும் தேவை. அமெரிக்க நிறுவனம் Nvidia இத்தகைய திறன் கொண்ட அதிநவீன ஏஐ சிப்களை தயாரிக்கிறது.

ஏஐ போட்டியில் சீனா முந்திவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்க சீன நிறுவனங்களுக்கு அதி திறன் ஏஐ சிப்கள் கிடைக்கவிடாமல் தடை விதித்துள்ளது. சீனாவுக்கு குறைந்த திறன் கொண்ட ஏஐ சிப்களே விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டுப்பாடு சீன ஏஐ ஆய்வுகளுக்கு கடிவாளமாக அமையும், என கருதப்பட்ட நிலையில் தான், டீப்சீக் நிறுவனம் சாட்ஜிபிடிக்கு நிகரான சாட்பாட்டை, அதைவிட பல மடங்கு குறைந்த விலையில் உருவாக்கியுள்ளது. இந்த சாட்பாட் பின்னே உள்ள நுட்பம் குறித்த ஆய்வு அறிக்கையையும் அண்மையில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

DeepSeek ai

சந்தையில் சரிவு

ஆக, டீப்சீக் சாட்பாட்டின் அறிமுகம் இரண்டு விஷயங்களை தெளிவாக உணர்த்தியிருக்கிறது. அமெரிக்க கட்டுப்பாடுகளை மீறி, சீனா ஏஐ ஆய்வில் தனது வலுவான நிலையை உணர்த்தியிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு பலவிதங்களில் தலைவலியை உண்டாக்கக் கூடியது.

இன்னொரு விஷயம், ஏஐ சேவைகளுக்கு பெரும் ஆற்றல் கொண்ட வன்பொருள்களும், அதைவிட பெரிய முதலீடும் தேவை, என அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கூறி வரும் நிலையில், அந்த வாதத்தை டீப்சீக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இதன் விளைவாகவே என்விடியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. இந்த போட்டி ஏஐ பரப்பில் இன்னும் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

டீப்சீக் நிறுவனம்

டீப்சீக் ஏஐ சேவை, இதே பெயரிலான டீப்சீக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2023ம் ஆண்டு லியாங் வென்பெங்க் (Liang Wenfeng) எனும் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்டது. இவர் ஏஐ சார்ந்த பங்குச்சந்தை நிறுவனம் ஒன்றை இதற்கு முன் நடத்திக்கொண்டிருந்தார். அமெரிக்கா சீனாவுக்கான சிப் தடை விதித்த பிறகு, டீப்சீக் சாட்பாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

என்விடியா சிப்களுக்கான விற்பனை நிலையத்தை நடத்திக்கொண்டிருந்தவர் பழைய சிப்கள் தொகுப்பு மற்றும் வன்பொருள்களை புதுமையாகக் கையாண்டு, மிகக் குறைந்த செலவில் ஏஐ சாட்பாட்டை உருவாக்கி காட்டியிருக்கிறார். இதை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பும் கூறியிருக்கிறார். ஏஐ உலகம் புதிய போட்டிக்கு தயாராகிறது.


Edited by Induja Raghunathan