ஜெப் பெசோஸ் டு எலான் மஸ்க்: கோடீஸ்வரர்கள் பார்த்த முதல் வேலை, சம்பளம் எவ்வளவு தெரியுமா?
உபெர் நிறுவனர் கலானிக், பங்குச்சந்தை மகாராஜா வாரென் பப்பே, ஸ்னேப்சேட் நிறுவனர் ஸ்பிஜெல் இன்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்கள் முதல் வேலை நம் போன்றோர் பார்க்கும் வேலையாகவே இருந்தது.
வாரன் பப்ஃபெட், ஜியார்ஜியோ அர்மானி மற்றும் எலான் மஸ்க் ஆகிய கோடீஸ்வரர்கள் பற்றி கேள்விபட்டதும் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது என்ன? அவர்களின் தனி விமானங்கள், மாளிகைகள் மற்றும் சொகுசு கார்கள் தானே?
உச்சத்தில் இருப்பதற்கான பரிசு இனிப்பாக இருந்தாலும், கோடீஸ்வரராவதற்கான பயணம் கடினமானது. ஒரு சில கோடீஸ்வரர்கள் வாரிசாக அந்த பலனை பெற்றாலும், இந்த லிஸ்டில் உள்ள பலரும் வழக்கமான வேலையில் இருந்து துவங்கியவர்கள் தான்.
ஜெப் பெசோஸ் முதல் வேலை எது என்று உங்களுக்குத்தெரியுமா? உபெர் நிறுவனர் டிராவிஸ் கலானிக் விற்பனை பிரதிநிதியாக துவங்கியவர் என்பது தெரியுமா?
உங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள இன்னமும் தாமதமாகி விடவில்லை என்பதை உணர்த்த, உலக கோடீஸ்வரர்கள் பலரது முதல் வேலையின் பட்டியலை உங்களுக்காக உருவாக்கியிருக்கிறோம்.
கோடீஸ்வரர்களின் முதல் வேலை
ஜெப் பெசோஸ்
2022 ஃபோர்ப்ஸ் கோடீஸ்வரராக பட்டியலிடப்பட்டுள்ள ஜெப் பெசோஸ் பார்த்த முதல் வேலை மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்தில் ஃபிரை சமைப்பதாகும். 1980ல் இந்த வேலையில் துவங்கியவர் மணிக்கு 2 டாலர் சம்பாதித்தார். இந்த வேலையின் போது வர்த்தக நுணுக்கங்களை கற்றுக்கொண்டவர், பர்கர் செய்வதில் இருந்து, 167.6 பில்லியன் டாலர் நிகர மதிப்பு உள்ளவராக உருவானார்.
டிராவிஸ் கலானிக்
உபெர் நிறுவனர் மற்றும் முன்னாள் சி.இ.ஓ டிராவிஸ் கலானிக், செல்வ வளத்துடன் பிறந்தவர் அல்ல. அவரது முதல் வேலை வீடு வீடாக சென்று, கட்கோ நிறுவன கத்திகளை விற்பதாக அமைந்தது. பெரும்பாலான இளம் வயதினர் போல சாதாரண வேலையில் இருந்து துவங்கியவரின் இன்றைய மதிப்பு 2.8 பில்லியன் டாலர்.
வாரன் பப்ஃபெட்
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன தலைவர் மற்றும் சி.இ.ஓ வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் போடும் வேலையில் இருந்து துவங்கினார் வாரன் பப்ஃபெட். 1994ல் அவர் மாதந்தோறும் 175 டாலர் சம்பாதித்தார். இன்று அவரது நிகர மதிப்பு 103.4 பில்லியன் டாலர்.
எலான் மஸ்க்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், அவரது டிவீட்கள் அல்லது விண்வெளி முயற்சிக்காக எப்போது செய்தியில் அடிபடுகிறார். ஆனால், அவர் துவக்கத்தில் தென்னாப்பிரிக்காவும் கம்ப்யூட்டர் கேம் விற்பனை செய்து கொண்டிருந்தார். முதல் வேலையில் இருந்து 500 டாலர் சம்பாதித்தார். பின்னர், கனடா குடியேறிவர் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றத்துவங்கினார். அவரது இன்றைய நிகர மதிப்பு 263.4 பில்லியன் டாலர்.
ஜியார்ஜ்யோ அர்மானி
பேஷன் துறையின் ஜாம்பவானான இவர், தனது நேர்த்தியான வடிவமைப்பால் பேஷன் உலகை மாற்றி அமைப்பதற்கு முன் ஒரு காலத்தில் இத்தாலிய ராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். ராணுவத்தில் இருந்த போது 20 நாள் விடுமுறையில் சென்றவர், ஆடைகளில் தனக்கிருந்த ஈடுபாட்டை உணர்ந்தார். அதன் பிறகு ராணுவ பணி முடிந்து, மிலனில் புகழ்பெற்ற விற்பனை நிலையத்தில் பணியாற்றச்சென்றார்.
இவான் ஸ்பிஜல்
ஸ்னாப்சேட் நிறுவனர் ஸ்பிஜல் ஸ்டான்போர்டு பல்கலையில் பயின்று அங்கு தனது இணை நிறுவனர்களை சந்தித்தாலும், ரெட் புல் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி இருக்கிறார். இன்று அவரது நிகர மதிப்பு 4 பில்லியன் டாலர்.
புரூஸ் நார்ட்ஸ்ட்ராம்
ரீடைல் துறை ஜாம்பவான், நார்ட்ஸ்ட்ராம் 9வது வயதில் முதல் வேலையில் சேர்ந்தார். குடும்ப நிறுவனத்தில் முதல் வேலை பார்த்தவர், மணிக்கு 25 செண்ட் சம்பாதித்தார். இரண்டாம் உலகப்போரின் போது, இந்த ஷூ நிறுவனத்தின் ஸ்டார்க்ரூமில் பணியாற்றினார். சிறு வயது முதல் வர்த்தக அனுபவம் பெற்றவர், ஷூ விற்பனை நிலையங்களை 7 ல் இருந்து ஐரோப்பாவில் 27 நகரங்களில் 156 ஆக விரிவாக்கினார்.
ரோஜர் பென்ஸ்கே
இவர் துவக்கத்தில் ரெஸ்டாரண்டில் பணியாற்றவில்லை, பந்தைய கார் வீரராக இருந்தார். பந்தைய கார்களை வாங்கி விற்கும் தொழில்முனைவோராக இருந்தார். பந்தைய கார்கள் ஆர்வம் காரணமாக இவர் இன்று 1.6 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருக்கிறார்.
அலக்ஸாண்ட ஸ்பானோஸ்
அமெரிக்க ரியல் எஸ்டேட் கோடீஸ்வரரான அலக்ஸாண்ட் ஸ்பானோஸ், சாண்ட்விச் விற்பனை செய்து கொண்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஸ்பானோஸ், 800 டாலர் கடனில் வாங்கிய டிரக்கில் புலம் பெயர்ந்தவர்களுக்கு சாண்ட்விச் விற்பனை செய்தார். அவரும் மனைவியும், இரவு முழுவதும் சாண்ட்விச் தயார் செய்து மறுநாள் விற்பனை செய்வார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் லட்சாதிபதியானார்.
மார்க் ஜுக்கர்பர்க்
கல்லூரியில் இருந்த போதே மார்க், ஃபேஸ்புக்கை உருவாக்கியதால் அவர் என்ன வேலை பார்த்துக்கொண்டிருந்தார் என வியக்கலாம். வேலை என்று கருதக்கூடிய பணியில் அவர் இல்லை என்றாலும், பின்னாளில் மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்க விரும்பிய ஸ்னேப்ஸ் எனும் இசை சிபாரிசு சேவைக்கான மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார். இங்கு அவருக்கு வேலை அளிக்கப்பட்டாலும், அவர் ஹார்வர்டு வந்துவிட்டார். அதன் பிறகு, அவர் வரலாறு படைத்தார். இன்றைய மதிப்பு 60.4 பில்லியன் டாலர்.
யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan