Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

12ஆண்டுகள்; ரூ.2,024 கோடி நிதியுதவி: Milaap Crowdfunding மூலம் ‘இல்லாதோர்க்கு உதவிடும் இந்தியர்கள்’

வறியவருக்கு உதவிட ஒரேயொருவர் பெருந்தொகையை கொடுப்பதைக் காட்டிலும், பல கரங்கள் ஒன்றுகூடி சிறியளவில் கொடுப்பினும், தேவைக்கான நிதி உரிய நேரத்தில் Crowd-funding மூலம் திரட்டுவது சாத்தியம் என நிரூபித்துள்ளது Milaap.

12ஆண்டுகள்; ரூ.2,024 கோடி நிதியுதவி: Milaap Crowdfunding மூலம் ‘இல்லாதோர்க்கு உதவிடும் இந்தியர்கள்’

Wednesday July 13, 2022 , 7 min Read

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து...

பயனை எதிர்ப்பாராமல் இல்லாதோர்க்கு கொடுப்பதே ’ஈகை’ என அன்றே சொல்லிச் சென்றார் திருவள்ளுவர். இன்று உலகளவில் Charity என்ற சொல் பிரபலமாகப் பேசப்பட்டாலும், இந்தியர்களைப் பொறுத்தவரை ‘தானம்’ என்பது பண்டையகாலம் முதல் இருந்து வந்துள்ள நடைமுறையே.

ஆனால், பொதுவாக பணக்காரர்களே தானம் தர்மம் செய்பவர்கள் என்றும், நடுத்தர மக்கள் சேமிப்பு, குடும்பம் எனச் சுயநலவாதிகளாகவே பார்க்கப்படுவது இங்கு வழக்கமாக்கிவிட்ட ஒன்று.

இந்த பார்வை தவறு என்றும், தேவையிருப்போர்க்கு உகந்த நேரத்தில் கொடுத்து உதவும் வள்ளல்கள் நம்மிடையேதான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரபலமடைந்ததே ‘Crowdfunding' அதாவது ‘கூட்டுநிதி’ உதவியாகும்.

வறியவருக்கு உதவிட ஒரேயொருவர் பெருந்தொகையை கொடுப்பதைக் காட்டிலும், பல கரங்கள் ஒன்றுகூடி சிறியளவில் கொடுப்பினும், தேவைக்கான நிதி உரிய நேரத்தில் திரட்டுவது சாத்தியம் என நிரூபித்த மாடலே Crowdfunding.

அப்படி, இந்தியர்களின் கொடுத்து உதவும் உள்ளத்தை வெளியுலகிற்கு காட்ட உதவியது இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கூட்டுநிதி சமூக நிறுவனம்Milaap’. 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மிலாப்’ வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Anoj Viswanathan
கடந்த 12 ஆண்டுகளில் ‘Milaap' சுமார் 7 லட்சம் நிதி திரட்டல்களை (Fundraisers) தங்கள் தளம் மூலம் செயல்படுத்தி, ரூ.2,024 கோடி கூட்டுநிதியை (Money Raised) பெற்று பல லட்சம் பேர்களுக்கு உதவிகளை புரிந்து சாதனையை படைத்துள்ளது.

இந்தியா போன்ற பலத்தரப்பட்ட பொருளாதாரச் சூழல், கலாச்சாரம், வாழ்க்கைமுறை, கொண்ட மக்கள் வாழும் நாட்டில் 'Crowdfunding' என்ற ஒரு புதிய முயற்சியை தொடங்கி, மக்களுக்கு அதனைப் புரியவைத்து, நம்பிக்கையை பெற்று 12 ஆண்டுகள் ‘Milaap' வளர்ச்சி அடைந்தது எப்படி?

ஒரு பொது தளத்தில் மக்களை வரவழைத்து, முன்பின் தெரியாதோருக்கும் உதவிடச் செய்தது எப்படி? என அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் அனோஜ் விஸ்வநாதன் நம்மிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.

நேர்காணலில் இருந்து தொகுப்பு இதோ:

இந்துஜா: கூட்டுநிதி என்பது இன்றும் கூட அதிகம் பரிச்சயமில்லாத விஷயமாகவே இருக்கும் வேளையில், 12 ஆண்டுகள் முன் இந்த ஐடியா, நோக்கம் வந்தது எப்படி?

அனோஜ்: நான் கோவையில் பிறந்து வளர்ந்தேன். டிகிரியை ஸ்காலர்ஷிப்பில் சிங்கப்பூரில் படித்தேன். பின்னர், ஹைதராபாத்தில் மைக்ரோ ஃபைனான்சிங் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். அப்போது, நாங்கள் சிறுதொழில் புரிவோர்க்கு கடன் வழங்கும் திட்டங்களில் பணிபுரிந்து வந்தோம். அங்குதான் என் இணை நிறுவனரை சந்தித்தேன். அப்போது எனக்கு

மூன்று முக்கிய விஷயங்கள் புரிந்தது.

1. சிறியளவில் முதலீடு செய்தாலே மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள வகையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

2. அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இத்தகைய சிறு தொகையும் பரவலாக பலருக்குக் கிடைப்பதில்லை.

3. ரிஸ்க் பற்றிய கண்ணோட்டம் தனிநபருக்கும் நிறுவனங்களுக்கும் மாறுபட்டிருந்தது.

சிலகாலம் அந்த பணியில் இருந்துவிட்டு, சிங்கப்பூர் திரும்பினேன். அமெரிக்காவில் கூட்டுநிதி (Crowd-funding) என்கிற கான்செப்ட் அறிமுகமாகியிருந்த காலகட்டம் அது. அதனால், அதைப் பற்றி சிந்தித்தேன்.

“இந்தியாவில் சமூகத் தேவைகளுக்காக ஏன் கூட்டுநிதி பிரச்சாரம் தொடங்கக்கூடாது. உதவி தேவைப்படும் தனிநபர்களை ஒருவரோடு ஒருவர் இணைக்கும் முயற்சியாக ஒரு தளத்தை உருவாக்கவேண்டும் என முடிவெடுத்தேன்.”

இந்துஜா: தொடக்கத்தில் கூட்டுநிதி தளத்தில் யார் யாருக்கு உதவிட திட்டமிட்டீர்கள்?

அனோஜ்: 2009 காலகட்டத்தில் நிறுவனங்கள் மூலம் தேவைப்படுவோருக்கு நிதி திரட்டவே திட்டமிட்டோம். நாங்கள் எல்லாரும் இளம் வயதில் இருந்ததால், எங்களை நம்பி நிறுவனங்கள் நிதி அளிக்க தயக்கம் காட்டினார்கள். அதனால், இந்த முன்னெடுப்பு பலனளிக்கவில்லை.

2010ல் ‘Milaap' என்று தளமாக தொடங்கியபோது முதல் நான்காண்டுகள் வரை மக்களிடையே நம்பக்கியை பெறுவது கஷ்டமாக இருந்தது. கல்விக்கு நிதியுதவி தேவைப்படுவோர் பற்றி நாங்கள் தெரிந்தவர்கள், நண்பர்கள் மத்தியில் சொல்லி உதவி பெற்று வந்தோம்.

”முதல் Crowdfunding ஈவென்ட் ஜூன் 2010ல் நடத்தினோம். நான் படித்த யூனிவர்சிட்டியில் ஒரு கிளாஸ் ரூம் புக் செய்து நண்பர்கள், சீனியர்களை அழைத்து எங்கள் முயற்சியைப் பற்றி விவரித்தேன். அந்த சமயத்தில் 20 பேருக்கு கல்வி, மருத்துவ உதவிகள் தேவைப்பட்டது. அவர்களது கதைகளை எழுதி போஸ்டர்களை கிளாஸ் ரூமில் ஒட்டி வந்தவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.”

நிதி தேவைப்பட்ட 20 பேருக்கும் கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் வரை நன்கொடையாக கிடைத்தது. இது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து, ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பணம் என்பதை வெறும் நம்பர்களாக சொல்லாமல், தேவைப்படுவோரின் பின்னணி, கதையைச் சொல்லி நிதி உதவி கேட்கும்போது நல்ல பலனளித்தது. இதையே எழுத்து வடிவில் மட்டுமல்லாமல் விஷுவல் வடிவில் இப்போது கொடுப்பதால் மேலும் பலரைச் சென்றடைந்துள்ளது.

கல்வி, மருத்துவம், கிராமப்புறத்தினரின் தேவைகள் போன்றவற்றில் தான் ஆரம்பத்தில் அதிக கவனம் செலுத்தினோம். ஆனால், போகப்போக அதிகமாக மருத்துவ உதவி வேண்டியே பலர் எங்களை அணுகினார்கள். அப்போதுதான் இந்தியாவில் மெடிக்கல் ஹெல்ப்க்கு டொனேஷன் தேவை இருப்பது புரிந்தது.

Milaap founders

Milaap இணை நிறுவனர்கள்: அனோஜ் விஸ்வநாதன் | மயுக் சவுத்ரி

இந்துஜா: Milaap-ன் பிசினஸ் மாடல் என்ன? இந்த முயற்சியை தொடர எது உங்களுக்கு உத்வேக அளித்தது?

அனோஜ்: 2012ம் ஆண்டு வரை நிறுவனர்கள் எங்களுக்கென சம்பளம் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. சொந்த சேமிப்பைக் கொண்டு நிர்வகித்து வந்தோம். 2018ம் ஆண்டிற்குப் பின்னரே நிறுவனத்தை நடத்தத் தேவையான பணம் ஓரளவிற்கு கிடைத்தது.

”மக்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு இதுபோல் உதவி செய்யும் முயற்சியை இதுவரை யாரும் செய்யவில்லை. இதை செய்தே ஆகவேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது. அதுதான் இன்றும் உந்துசக்தியாக இருக்கிறது.”

இந்துஜா: 10 ஆண்டுகள் கடந்து, நன்கொடை கொடுக்கும் மக்களின் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?

அனோஜ்: மக்கள் நன்கொடை அளிக்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும், அதுபற்றிய கண்ணோட்டம் மாறவேண்டும் என்று நினைத்தோம். சமூகப் பொறுப்புணர்வுடன் கொடுக்கும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறியிருக்கிறது மனநிறைவை தந்துள்ளது.

Milaap தளத்தில் இன்று நன்கொடை அளிப்பவர்களில் 85% பேர் இந்தியர்கள், மற்றவர்கள் NRI-க்கள்.

அரசியல் ரீதியான காரணங்களைத் தவிர மற்ற அனைத்து சமூக நோக்கங்களுக்கு பயன்படும் வகையில் மிலாப் நிதி திரட்டுகிறது.

இப்போது கேன்சர் ட்ரீட்மென்ட், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற தேவைகளுக்கு நன்கொடை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்துள்ளது. அதேபோல், இவர்களுக்குத் தேவையான பணமும் நன்கொடையாளார்கள் இடமிருந்து வேகமாக கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இந்துஜா: Milaap எந்த முக்கிய தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது? மறக்கமுடியாத கிரவுட் ஃபண்டிங் சம்பவம் பற்றி சொல்லங்கள்?

”தேவையிருக்கும் மக்களை, கொடுக்கும் மக்களுடன் இணைக்கும் முயற்சியாகவே Milaap தொடங்கப்பட்டது. இன்றும் அதே தத்துவத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறோம்.”

2014ம் ஆண்டு இறுதியில் மும்பையைச் சேர்ந்த நிதேஷ் என்பவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பண உதவி தேவைப்பட்டது. இவர் புற்றுநோய் பாதித்து மீண்டவர், சமூக ஆர்வலர். அப்போது அறுவை சிகிச்சைக்கு 60 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அவரைப்பற்றி தளத்தில் பதிவிட்டோம். ஒரே வாரத்தில் இந்தத் தொகை கிடைத்தது. அதுவே அப்போது திரட்டிய அதிகபட்ச தொகை.

”நன்கொடை பெறுபவர்கள் ஒரு பிரிவினர் என்றும் கொடுப்பவர்கள் மற்றொரு பிரிவினர் என்றும் எந்த ஒரு வரையறையும் கிடையாது. இன்று உதவி பெறுபவர்கள் வேறொருவருக்கு பரிந்துரை செய்வார். அவர்களே இன்னொரு சந்தர்பத்தில் மற்றவர்களுக்கு உதவுவதையும் பார்க்கிறோம். கஷ்டப்படுபவர்கள் கூட 50 ரூபாய் கொடுத்து உதவுகிறார்கள்.”

இந்துஜா: உதவி கேட்போரின் தேவை உண்மையானதா, திரட்டப்படும் பணமும் முறையாக சென்றடைகிறதா என்று எப்படி கண்காணிக்கிறீர்கள்?

அனோஜ்: உதவி கேட்பவர் விவரங்கள் எங்கள் குழுவால் சரிபார்க்கப்படுகிறது. அதேபோல், எதாவது சந்தேகம் என யாராவது எங்களிடம் சொன்னால், அதையும் தீர விசாரிப்போம். திரட்டிய பணமும் முறையாக சென்றடைகிறதா என்பது சரிபார்க்கப்படுகின்றன.

2015-16 ஆண்டுகளில் படிப்படியாக மருத்துவமனைகளுடன் தொடர்பு ஏற்படுத்தினோம். அவர்கள் எங்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். நோயாளிகள் பலர் இத்தளம் மூலம் பலனடைந்ததைப் பற்றி தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் பெரிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனடைந்தனர். இப்போது இரண்டம், மூன்றாம் நிலை ஊர்களைச் சேர்ந்தவர்களும் பலனடைகிறார்கள்.

வசதி இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் ஏன் சிகிச்சை பெற நன்கொடை கேட்பதாக பலர் அதிருப்தி தெரிவிப்பார்கள். ஆனால், உண்மையில் பெரும்பாலான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதில்லை. அல்லது அதிக காலம் காத்திருக்க வேண்டும். இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு சிலர் செல்கின்றனர்.

“Milaap தளத்தில் நன்கொடை கோருபவர்கள் பெரும்பாலும் லோயர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ் மக்கள். இவர்களிடம் சரியான இன்சூரன்ஸ் இருப்பதில்லை, அதே சமயம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க தகுதி பெறமாட்டார்கள். இதுவே இந்தியாவில் பலர் இருக்கும் நிலை. அதனாலேயே சிகிச்சை பெற நன்கொடை கேட்கின்றனர்.”

இந்துஜா: சமூக முயற்சி நிறுவனமாக இருந்தாலும், உங்களின் செயல்பாடுகள் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அனோஜ்: 2014ம் ஆண்டு முதல், நிதி கேட்டு campaign செய்பவர்கள் திரட்டிய பணத்தில் 5% கட்டணமாக வசூலித்தோம். நிதி உதவி கேட்டு மிலாப் தளத்தில் இலவசமாக பதிவிடலாம், இதற்குக் கட்டணம் இல்லை. அவர்கள் எதிர்ப்பார்த்த நிதி கிடைத்தவுடன் அந்த தொகையில் 5% நாங்கள் எடுத்துக்கொண்டு அவர்களின் வங்கிக்கணக்கில் மீதியை செலுத்திவிடுவோம். இதுவே எங்கள் பிசினஸ் மாடல்.

இயற்கை பேரிடர் சமயங்களில் நிதி திரட்டும்போது நாங்கள் எந்த கட்டணமும்  வசூலிப்பதில்லை. சென்னை வெள்ளம், கேரளா வெள்ளம், கோவிட்-19 என பல சமயங்களில் கோடிகளில் கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதை சமூக நோக்குடன் செய்தோம்.

fundraise

இந்துஜா: நீங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டி உள்ளீர்களா? உங்களின் வருவாய் பற்றி சொல்லுங்கள்?

மிலாப் தளத்தில் தனிநபர்கள், விசி-க்கள் என 10 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

2015-16ல் 12 கோடி ரூபாய் வரை Crowdfunding பெறப்பட்டு 60 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டினோம். 2016-17 ஆண்டுகளில் 46 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டு, அதில் 5% வருவாய், 2கோடி 30 லட்சம் ஈட்டினோம். 2017-18 ஆண்டுகளில் 110 கோடி ரூபாயும் 2021-2022 ஆண்டுகளில் 700 கோடி ரூபாய் வரையிலும் நன்கொடைகள் பெறப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு பேன்டமிக் வந்த சமயத்தில் 5% கட்டண மாதிரியை நிறுத்திவிட்டோம். நன்கொடை வழங்குபவர்கள் விருப்பப்பட்டால், மிலாப் தளத்திற்கு டிப்ஸ் கொடுக்கலாம், அதாவது விருப்பப்பட்ட தொகையாக செலுத்தும்படி மாற்றம் கொண்டு வந்தோம்.

“நிதி திரட்டுவோர் பலர் எங்களைத் தொடர்புகொண்டு 5% சேவைக் கட்டணம் அதிகமென தெரிவித்தார்கள். இந்தக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள கேட்டுக்கொண்டனர். இதனால் இந்த வணிக மாதிரியை மாற்றினோம்.”

இந்துஜா: கொரோனா சமயத்தை மிலாப் எப்படி சமாளித்தது?

அனோஜ்: கொரோனா சமயத்தில் தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. ஆனால், இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்டணமும் நாங்கள் வசூலிக்காததால், ஜீரோ வருவாய் இருந்தது.

“2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021ம் ஆண்டு வரை நன்கொடை அதிகம் திரட்டப்பட்டது, அதேசமயம் எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்ட சமயமும் அதுதான்.”

அதன் பிறகு, படிப்படியாக நன்கொடை வழங்குவோர் பலர் மிலாப் தளத்திற்கு சிறு தொகையை டிப்ஸ் ஆக கொடுக்க ஆரம்பித்தனர். அப்படியே சமாளித்தோம்.

“இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், 5% கட்டண வசூலைவிட, அவர்களாகவே கொடுக்கும் டிப்ஸ், சிலசமயம் அதிகமாகக் கூட இருக்கிறது. மக்கள் எங்கள் மீதும், எங்கள் முயற்சி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டியது. அதைத்தான் நாங்கள் எதிர்ப்பார்த்தோம்.”

இரண்டாவது அலையின்போது Milaap பலரைச் சென்றடைந்திருந்தது.

2022-ம் ஆண்டு வரை, 12 ஆண்டுகளில் மொத்தம் 2000 கோடிக்கும் அதிகமான தொகை நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சம் பேர் Milaap வழியே உதவி கேட்டு நன்கொடை பெற்று பலனடைந்திருக்கின்றனர். சுமார் 70 லட்சம் டோனர்கள் இருக்கிறார்கள்.

இந்துஜா: உங்களுக்கு போட்டியாளர்கள் யார்? கிரவுட் ஃபண்டிங் துறை இந்தியாவில் எப்படி வளர்ந்திருக்கிறது?

Keto, Impactguru போன்றவை இதே பிரிவில் செயல்படுகின்றனர். மக்கள் அவசர மருத்துவத் தேவைகளுக்கு முதலில் சேமிப்பைப் பயன்படுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து கடன் வாங்குகின்றனர், அல்லது நெருங்கிய வட்டத்தில் உதவி பெறுகின்றனர். மிலாப் போன்ற தளங்கள் செயல்பட்டாலும்கூட இந்தப் பகுதியில் தேவை இன்னும் அதிகம் என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

milaap free

இந்துஜா: Milaap-இன் அடுத்தக்கட்டம் என்ன?

அனோஜ்: 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ’Milaap Donor Gurantee' என்று அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை தவறாகப் பயன்படுத்தப்பட்டது தெரிந்தால், நன்கொடை அளித்தவருக்கு அந்தத் தொகையை நாங்கள் திருப்பி கொடுத்து விடுவோம்.

கூட்டுநிதியை பொருத்தவரை நம்பகத்தன்மை அடிப்படையிலேயே இந்த வணிகம் செயல்படுகிறது. இதில், தொடர்ந்து விவரங்கள் சரிபார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். ஒருவர் நன்கொடை வழங்கிய பின்னர் அது சரியான பயனரைச் சென்று சேரவில்லை என்றால், அந்தத் தொகையை நன்கொடை அளித்தவருக்கே திருப்பி அளித்துவிடுவோம். இதுவே நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் நம்பிக்கை.

’Milaap Foundation' என தொடங்கியிருக்கிறோம். மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படுகிறோம். கூட்டுநிதி கிடைக்காதவர்கள், ஏழை மக்கள், காப்பீடு கிடைக்காதவர்கள் போன்றோருக்கு உதவுவதே இதன் நோக்கம்.

குறிப்பிட்ட சிகிச்சைக்கு குறைந்தபட்சமாக ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டு இந்த முயற்சி மூலம் மருத்துவமனைக்குக் கொடுக்கப்படும். மருத்துவமனையும் அதன் தரப்பில் செலவுகளைக் குறைத்துக்கொண்டு ஆதரவளிக்கும். இப்படியான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியர்கள் தாராள குணம் படைத்தவர்கள், நம்பகத்தன்மை உடையவர்கள், என்பதை உலகிற்கு நிரூபிக்க, Milaap நிறுவன வளர்ச்சியே மிகப்பெரிய சான்று.