6G, நெறிமுறைக்குட்பட்ட ஏஐ, தரவுத் தனியுரிமையில் இந்தியாவின் பங்கு - இந்தியா மொபைல் காங்கிரஸில் மோடி பேச்சு!
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT), இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) இணைந்து, அக்டோபர் 15 முதல் 18 வரை நடைபெற்ற நான்கு நாள் அரங்கம் மற்றும் கண்காட்சியில் 123 நாடுகளைச் சேர்ந்த 1.75 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2024ல் 6G, நெறிமுறை AI மற்றும் தரவு தனியுரிமை ஆகியவற்றில் உலகளாவிய தரநிலைகளை அமைப்பதில் இந்தியாவின் தலைமைத்துவம் வகிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
டிஜிட்டல் இந்தியாவின் நான்கு தூண்களை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்: குறைந்த விலை சாதனங்கள், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டிஜிட்டல் விரிவாக்கம், எளிதில் அணுகக்கூடிய தரவு மற்றும் டிஜிட்டல் ஃபர்ஸ்ட் இலக்கு ஆகியவற்றை நான்கு தூண்கள் என்று வர்ணித்தார்.
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT), இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) இணைந்து, அக்டோபர் 15 முதல் 18 வரை நடைபெற்ற நான்கு நாள் அரங்கம் மற்றும் கண்காட்சியில் 123 நாடுகளைச் சேர்ந்த 1.75 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதன் அடிப்படை கரு "எதிர்காலம் இப்போது நம் கையில்” என்பதாகும்.
இந்த மாநாட்டுக்கு இணையாக புது டெல்லியில்.2024 அக்டோபர் 15-ம் தேதி முதல் 24ம் தேதி வரை உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் மாநாடும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மொபைல் காங்கிரஸில் ஜிஎஸ்எம்ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் தொடர்புப்படுத்தலுக்கான உலகளாவிய ஒழுங்கமைவின் இருப்பு அதிகரித்திருந்தது. இதன் உலகளாவிய தலைமைத்துவக் குழு அரசு அதிகாரிகள், தொழிற்துறை கூட்டமைப்புகள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினர். இதோடு கண்காட்சிக் கூடமும் நடத்தப்பட்டது.
இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 இந்தியாவின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பைக் காட்சிப்படுத்தியது, இதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் புதுமைக் கண்டுப்பிடிப்பாளர்கள் குவாண்டம் தொழில்நுட்பத்தின் மேம்பாடுகள், 5ஜி, 6ஜி பயன்பாட்டு முறைமைகள், கிளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், IoT, செமிகண்டக்டர்கள், சைபர் செக்யூரிட்டி, கிரீன் டெக், சர்க்குலர் இகானமி, சாட்காம் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தனர்.
இந்திய மொபைல் காங்கிரஸின் தலைமை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணா கூறுகையில்,
"ஐஎம்சி 2024ல் பல இடையூற்றுக் கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. IMC பல ஆண்டுகளாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது ஒரு சிறந்த அனுபவமாகும், IMC 2024 அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை வெளிக்கொணரவும் ஒத்துழைக்கவும் உலகளாவிய தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒருங்கிணைக்கிறது,” என்றார்.
இந்தியா மொபைல் காங்கிரஸ் 13 அமைச்சகங்கள், 29 கல்வியாளர்களின் பங்கேற்பு உட்பட 310க்கும் மேற்பட்ட கூட்டாளிகள் மற்றும் கண்காட்சியாளர்ளை ஒருங்கிணைத்தது. இதில் உலக மற்றும் இந்தியப் பேச்சாளர்கள் 820 பேரை ஈடுபடுத்தியது இந்தக் கருத்தரங்கில் 180க்கும் மேற்பட்ட அமர்வுகள் அரங்கேறின.
இந்த மாநாடு 'Aspire' என்னும் ஸ்டார்ட்-அப் திட்டத்தின் கீழ் 920 ஸ்டார்ட்-அப்`களை ஒன்று கூட்டியது. இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு சிறப்புக் கவனம் பெற்றது. ஸ்டார்ட்அப்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப-தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 750 AI- அடிப்படையிலான பயன்பாட்டு முறைமைகள் உட்பட 900க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பயன்பாட்டு முறைமைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.