Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் பெண் பணியாளர்களின் சேவை’ - WHO பார்வையில்!

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் வீடு வீடாகச் சென்று சேவைபுரியும் பெண் பணியாளர்களை களத்தில் சந்தித்து, அவர்களது பங்களிப்பை மெச்சுகிறது உலக சுகாதார நிறுவனம்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் பெண் பணியாளர்களின் சேவை’ - WHO பார்வையில்!

Saturday June 03, 2023 , 4 min Read

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் வீடு வீடாகச் சென்று சேவைபுரியும் பெண் பணியாளர்களை களத்தில் சந்தித்து, அவர்களது பங்களிப்பை மெச்சும் உலக சுகாதார நிறுவனம் (WHO), இது தொடர்பாகவும், இத்திட்டத்தின் முன்னெடுப்புகள் குறித்தும் விரிவான செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது...

சென்னையைச் சேர்ந்த வி.சசிகலாவும், ஹெச்.ஹேமலதாவும் தங்களது மக்கும் சணல் பைகளில் நோய்க் கண்டறியும் கருவிகள் மற்றும் நோயைக் குணமாக்கும் மருந்துகளுடன் தங்களது இளம் சிவப்பு சீருடை அணிந்துகொண்டு தினமும் காலை 25 வீடுகளுக்குச் சென்று இலவச மருத்துவ - சுகாதார சேவைகளை வழங்கி வருகின்றனர். இவர்கள் பயிற்சி பெற்ற மகளிர் சுகாதார தன்னார்வலர்கள்.

தமிழ்நாட்டின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ (MTM) முயற்சியின் கீழ், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனநலக் கோளாறுகள், காசநோய் (TB), ஊட்டச்சத்து உள்ளிட்ட தொற்றாத நோய்களுக்கு (non-communicable diseases) 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று இவர்கள் பரிசோதிக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 பயனாளிகளுக்கு நீண்ட கால நோய் நிலைமைகளுக்கான மருந்துகளை அவர்கள் வழங்குகிறார்கள். மேலும், உகந்த நோய் மேலாண்மை மற்றும் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு அவர்கள் இணங்குவதை மதிப்பாய்வு செய்கிறார்கள்.
mtm

தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் ஆயிரக்கணக்கான பயனாளர்களில் சென்னையைச் சேர்ந்த வனிதாவும் ஒருவர். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளது. ஆனால், சென்னை கொளத்தூரில் உள்ள மக்கரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே வராமல் வழக்கமான மருத்துவ சிகிச்சை மற்றும் கவனிப்பை தமிழக அரசின் திட்டத்தின் மூலம் வீட்டிலேயே பெறுகிறார் வனிதா.

சுகாதாரத் தன்னார்வலர்களான சசிகலாவும், ஹேமலதாவும் வனிதாவின் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த குளுக்கோஸ் அளவை அளவிடவும், பதிவு செய்யவும், மாதாந்திர டோஸ் மருந்துகளை வழங்கவும், வலிகள், நோய் அறிகுறிகள், உணவு, தூக்கம் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் அவரது உடல்நலம் குறித்த கேள்விகளைக் கேட்க அவரை வீட்டிற்குச் சென்று பார்க்கிறார்கள்.

வனிதாவின் மகன் முரளி மோகனுக்கு வயது 39. இவருக்கு எந்த நோயும் கண்டறியப்படவில்லை என்றாலும், 30 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் NCD ஸ்கிரீனிங்கிற்கு தகுதி பெற்றுள்ளார். NCDs மேலாண்மை, காசநோய், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மனநலம் ஆகியவற்றுக்கான சேவைகள் நோயாளிகளுக்கு விரிவான தொடர்ச்சியான கவனிப்பை வழங்க மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

mtm

நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் அதிகம். மேலும், இத்தகையோருக்கு சிகிச்சையும் பலனளிக்காமல் போகும் ஆபத்து உண்டு. மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மனநலப் பிரச்சினைகளுக்காக மக்களைப் பரிசோதிக்கிறார்கள்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் (UPHC) காசநோய்க்கான பரிசோதனைக்காக அறிகுறி உள்ளவர்களிடமிருந்து சளி மாதிரியை சேகரிக்கின்றனர். அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காசநோயைக் கண்டுப்பிடிக்கும் சளி மாதிரி சோதனை வசதிகள் உள்ளன, சோதனை முடிவுகள் ஒரே நாளில் கிடைத்தும் விடுகின்றன.

நீரிழிவு நோய் இருந்தால் காசநோய் வருவதற்கான ஆபத்து இருமடங்கு முதல் மும்மடங்கு வரை உள்ளது. காசநோய் சிகிச்சையின் போது மரணம் சம்பவிக்கும் ஆபத்து இருமடங்கு உள்ளது. காசநோய் சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் காச நோய் ஏற்படுவதற்கான் ஆபத்து நான்மடங்கு உள்ளது. மேலும் ஆபத்தானது என்னவெனில், காசநோய் மருந்திற்கும் குணமாகாது; தடுப்பு சக்தி கொண்ட காசநோய் உண்டு போன்றவை உலக நோய்த் தரவுகளிலிருந்து கண்டறியப்பட்ட விஷயமாகும்.

உலகளாவிய காசநோய் அறிக்கை 2021-இன் படி, 2020-ஆம் ஆண்டில் உலகளவில் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய 3,70,000 புதிய காசநோயாளிகள் உருவாகியுள்ளனர். காசநோய் மற்றும் நீரிழிவு நோயைக் கவனிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் WHO கூட்டுக் கட்டமைப்பானது, நீரிழிவு நோயாளிகளில் காசநோய்க்கான ஒத்துழைப்பு, கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

mtm

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தால் பயிற்சி பெற்ற மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் தன்னார்வலர்கள் இந்த ஒத்துழைப்பில் முன்னணியில் உள்ளனர். ஆபத்தான் இணை நோய்கள் கண்டறியப்பட்ட காசநோயாளிகளுக்கான ஒருங்கிணைந்த பராமரிப்புடன் சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகளை வலுப்படுத்த, தமிழ்நாடு மாநில காசநோய் பிரிவு இந்த மகளிர் சுகாதார தன்னார்வலர்களுக்கு தீவிர காசநோய் கண்டறியும் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு காசநோய் கண்டுப்பிடிப்புக்கு உதவும் தன்னார்வலர்களுக்கு ரூ.500 வழங்கப்படுகின்றது. மக்களைத் தேடி மருத்துவத் திட்ட தன்னார்வலர்கள் காசநோய் சிகிச்சையின் முழுமையான போக்கைக் கடைப்பிடிக்க நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதுடன் சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பையும் மேற்கொள்கின்றனர்.

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களைத் தேடி மருத்துவத் தன்னார்வலர்களால் பரிசோதிக்கப்படும் மக்களுக்கு நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குகின்றன.

பெண் சுகாதார தன்னார்வலர் காஞ்சனாவால் அடையாளம் காணப்பட்ட இரண்டு காசநோயாளிகள் இப்போது திரு.வி.க நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணியாளரின் மேற்பார்வையில் ஆறு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

mtm

அறிவிக்கப்பட்ட அனைத்து காசநோயாளிகளுக்கும் மாதாந்திர பின்தொடர்தல் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. பெண் சுகாதார தன்னார்வலர்கள் நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து சளியை பரிசோதனைக்காக சேகரிக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் 80 வீடுகளுக்குச் சென்று கொசுக்கள் பெருகும் இடங்களைக் கண்டறியும் தூய்மைப் பணி ஆய்வாளர்களிடம் தொடர்ந்து கண்காணிப்பதற்காக ‘சரிவர பின் தொடர் சிகிச்சைக்கு வராமல் தவிர்க்கும்’ நோயாளிகள்’ பட்டியல் பகிரப்படுகிறது. இதனால் பின்தொடர்தலைத் தவிர்க்கும் நோயாளிகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்திருக்கிறது,” என்று சென்னை காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு தலைமை தாங்கும் கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் மாவட்ட காசநோய் அதிகாரி டாக்டர் ஜெ.லாவண்யா கூறுகிறார்.

“ஒவ்வொரு நாளும் மாலை 4 - 8 மணி வரை பல்வேறு சிறப்பு பாலிகிளினிக்குகள் நடத்தப்படுகின்றன. பொது மருத்துவம் (இன்டர்னிஸ்ட்), மனநல மருத்துவம், நோய்த்தடுப்பு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை , சிறுநீரகவியல், கண் மருத்துவம், தோல் மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் ஆகியவற்றில் நிபுணர்களால் UPHC-கள் தாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு சிறப்பு கவனிப்பையும் வழங்குகின்றன. சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக உள்ளது,” என்று சென்னையில் உள்ள கொளத்தூர் UPHC மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெய பிரியங்கா கூறினார்.

காசநோய் ஒழிப்புக்கான இந்தியாவின் தேசிய நல இலக்குத் திட்டமானது, 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது உலகளாவிய இலக்குகளை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஆயுஷ்மான் பாரத் - உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் மக்களுக்கு நெருக்கமான பரவலாக்கப்பட்ட ஸ்கிரீனிங் மற்றும் சிகிச்சை சேவைகளை உள்ளடக்கிய பல்நோக்கு அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.

காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதில் உதவுவதற்காக WHO இந்தியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப மற்றும் கள ஆதரவை வழங்குகிறது.

தகவல் மற்றும் படங்கள்: WHO India | கட்டுரை: ஜெய்


Edited by Induja Raghunathan