ஆன்லைன் கேமிங் மேடைகளை கட்டுப்படுத்த புதிய குழு அமைக்க பரிந்துரை!
ஆன்லைன் கேமிங் மேடைகள் அதிகரிப்பை கட்டுப்படுத்த மற்றும் விதிகள் பின்பற்றுப்படுவதை உறுதி செய்ய, அமலாக்கப்பிரிவு (ED), ரிசர்வ் வங்கி, வரி மற்றும் நுகர்வோ துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய துறைகளுக்கு இடையிலான குழு அமைக்கப்படலாம் என டிஜிஜிஐ அறிக்கை தெரிவிக்கிறது.
ஆன்லைன் கேமிங் மேடைகள் அதிகரிப்பை கட்டுப்படுத்த மற்றும் விதிகள் பின்பற்றுப்படுவதை உறுதி செய்ய, அமலாக்கப்பிரிவு (ED), ரிசர்வ் வங்கி, வரி மற்றும் நுகர்வோ துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய துறைகளுக்கு இடையிலான குழு அமைக்கப்படலாம், என டிஜிஜிஐ அறிக்கை தெரிவிக்கிறது.
நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (CBIC ) ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவு, 118 உள்ளூர் கேமிங் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கையை துவக்கியுள்ளது. ரூ.1,10,531.91 கோடி அளவு 34 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
28 சதவீத ஜிஎஸ்டி செலுத்த தவறியதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த 658 நிறுவனங்கள், பதிவு செய்யப்படாதவையாக கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 167 இணைய முகவரிகள் முடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி புலனாய்வுக்கான இயக்குனரகம் (DGGI) வெளியிட்டுள்ள 2023 ஆண்டறிக்கை, ஆன்லைன் மணி கேமிங், வரி ஏய்ப்பு, ஹவாலா, சைபர் குற்றங்கள் மற்றும் இதர சமூக இன்னல்களுக்கு வழி வகுக்ககூடியவை என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2023 வெளியிட்டப்பட்ட சட்ட உத்தரவை மீறி, கேமிங் நிறுவனங்களை வரி வளையத்திற்குள் கொண்டு வருவது சவாலாக உள்ளது.
இந்த நிறுவனங்கள் பல வெளிநாட்டு வரி சொர்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களை அடையாளம் காண்பது சிக்கலாக உள்ளது.
வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக ஆன்லைன் கேமிங் மேடைகள் தங்கள் இணைய முகவரியை அடிக்கடி மாற்றுகின்றன. இவற்றின் பயன்பாட்டில் டார்க் வெப் மற்றும் விபிஎன் கையாளப்படுவது மேலும் சிக்கலை உண்டாக்குகிறது.
எனவே, இவற்றை எதிர்கொள்ள பல் நோக்கு அணுகுமுறை தேவைப்படுகிறது. CBIC, CBDT, ED, MeITY, MCA, MIB, RBI, உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, இத்தகைய மேடைகளை கட்டுப்படுத்தவும், விதிகள் பின்பற்றப்படுவது, நுகர்வோர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றின் நோக்கில் அமைக்கப்படும் என்று, டிஜிஜிஐ அறிக்கை தெரிவிக்கிறது.
2023 அக்டோபரில், ஆன்லைன் கேமிங் செயல்பாடுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி பொருந்தும் என ஜிஎஸ்டி சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
ஆன்லைன் கேமிங் துறை கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்துள்ளது. 2023ம் ஆண்டு கணக்கு படி, ரூ.12,428 கோடியாக உள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு, இணைய வசதி மேம்பாடு, இளம் மக்கள்தொகை, உள்ளூர் கேமிங் உள்ளடக்கம் இந்த பெருக்கத்திற்கு காரணமாக அமைகின்றன.
இந்த விஷயம் தொடர்பாக நோட்டீஸ் பெற்ற பல நிறுவனங்கள், நீதிமன்றத்தை அணுகியுள்ளன. ரம்மி, போக்கர், உள்ளிட்ட விளையாட்டுகள் திறன் சார்ந்தவை என்பதால் ஆன்லைன் சூதாட்டமாக கருதக்கூடாது என இந்நிறுவனங்கள் வாதிட்டுள்ளன. ஜிஎஸ்டி சட்டத்தில் சூதாட்டம் மற்றும் பெட்டிங் வரையறுக்கப்படவில்லை.
"புகழ் பெற்ற பிரிட்டன் நீதி வல்லுனர், சர் வில்லியன் ரேனல் ஆன்சன், நிச்சயமில்லா ஒரு நிகழ்வின் வெளிப்பாடு அடிப்படையில் பணம் அல்லது பணத்திற்கு நிகரான பலனை பெறுவது பெட் என குறிப்பிடுகிறார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆன்லைன் கேமிங் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று டிஜிஜிஐ தெரிவித்துள்ளது."
டிஜிட்டல் பயனாளிகள் மத்தியில் பொறுப்பான கேமிங் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மத்திய மின்னணு அமைச்சகம் அல்லது ரியல் மணி கேமிங் தொடர்பான சட்டம் கீழ் பதிவு செய்த நிறுவனங்களை அறிந்திருப்பது, தகவல் பகிர்வு மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான வெளிநாடுகளுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்வது உள்ளிட்டவை இந்த துறையில் சட்ட விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
aஅங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan