Gold Rate Chennai: தொடரும் தங்கம் விலை உயர்வு - சவரன் ரூ.64,440-க்கு விற்பனை!
வாரத்தின் தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று மட்டும் அதிகரித்துள்ளது. எனினும், சவரன் ரூ.64,440-க்கு விற்பனையாவது நகை வாங்க விரும்புவோருக்கு கவலையை கூட்டியுள்ளது.
வாரத்தின் தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று மட்டும் அதிகரித்துள்ளது. எனினும், சவரன் ரூ.64,440-க்கு விற்பனையாவது நகை வாங்க விரும்புவோருக்கு கவலையை கூட்டியுள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.8,045 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.64,360 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.8,777 ஆகவும், சவரன் விலை ரூ.176 உயர்ந்து ரூ.70,216 ஆகவும் இருந்தது. தற்போது தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (24.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.8,055 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.64,440 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.8,787 ஆகவும், சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.70,296 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (24.2.2025) 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா குறைந்து ரூ.106.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 குறைந்து ரூ.1,06,900 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தொடர்வதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் கூடி வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் நிலையின்றி தடுமாறி வருகிறது. இதனால், தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,055 (ரூ.10 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,440 (ரூ.80 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,787 (ரூ.10 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,296 (ரூ.80 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan