முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி ஆசியாவின் நம்பர் 1 செல்வந்தர் ஆனார் கவுதம் அதானி!
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, $111 பில்லியன் சொத்து மதிப்புள்ள அதானி இப்போது உலகின் 11வது பணக்காரராக உயர்ந்துள்ளார். அம்பானி $109 பில்லியன் சொத்துடன் 12வது இடத்தில் இருக்கிறார்.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்வுக்குப் பிறகு, கௌதம் அதானி ஆசியாவின் பணக்காரர் என்ற அந்தஸ்தை எட்டினார். இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளினார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி,
$111 பில்லியன் சொத்து மதிப்புள்ள அதானி இப்போது உலகின் 11வது பணக்காரராக உயர்ந்துள்ளார். அம்பானி $109 பில்லியன் சொத்துடன் 12வது இடத்தில் இருக்கிறார்.
அமெரிக்க தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸ், அதானி குழுமத்தைப் பற்றிய பாசிட்டிவ் கண்ணோட்டத்தை அளித்ததை அடுத்து, அனைத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளும் வெள்ளிக்கிழமை 14% வரை உயர்ந்தன.
சந்தை மதிப்பில் ரூ.84,064 கோடி கூடுதலாகி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 10 அதானி குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ரூ.17.51 லட்சம் கோடியாக இருந்தது. இவைதான் அதானியை ஆசியவின் நம்பர் 1 பணக்காரர் இடத்துக்கு உயர்த்திய காரணிகளாகும்.

(Image: Twitter)
61 வயதான அதானி, 2022 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் மந்தமான வளர்ச்சியைக் கண்டபோதும், அவரது தனிப்பட்ட செல்வம் உயர்ந்த பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக ஆனார். ஆனால், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல விமான நிலையங்கள், நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை துறைமுகம், மீடியா நிறுவனமான என்டிடிவி, மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம், தரவு மையங்கள் மற்றும் பல பங்குகளை வைத்திருக்கும் அவரது பரந்துபட்ட $21 பில்லியன் குழுமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
ஹிண்டன்பர்க்கின் கடும் விமர்சன ஆய்வறிக்கைகளை அடுத்து பங்குச் சந்தையில் இவரது குழுமங்களின் பங்குகள் கடும் சரிவு கண்டு அதனால் 150 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பின்னடைவு ஏற்பட உலக செல்வந்தர்கள் டாப் 20 பட்டியலிலிருந்து இவர் பெயர் காணாமல் போனது, அப்போது அம்பானி மீண்டும் ஆசியவின் நம்பர் 1 செல்வந்தர் என்ற இடத்துக்கு உயர்ந்தார்.
இப்போது, அதானி கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு அம்பானியை முந்தியுள்ளார். ஜனவரியில், அதானி கிட்டத்தட்ட 12 மாதங்களுக்குப் பிறகு அம்பானியை முந்தினார், ஆனால், விரைவில் அம்பானிக்கு முதலிடத்தை ஒப்படைத்தார். தற்போது மீண்டும் அம்பானியை அதானி முந்திவிட்டார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, இதுவரை 2024 ஆம் ஆண்டில், அதானியின் நிகர மதிப்பு $26.8 பில்லியன் உயர்ந்துள்ளது, அம்பானியின் சொத்து $12.7 பில்லியன் அதிகரித்துள்ளது.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 52 ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்; அதானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அம்பானி!