Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘வீடு தேடி வரும் மயானம்’ - தமிழகத்தில் முதன் முறையாக ‘நடமாடும் தகன மேடை’

தமிழகத்தில் முதன்முறையாக ஈரோட்டில் நடமாடும் மயான சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

‘வீடு தேடி வரும் மயானம்’ - தமிழகத்தில் முதன் முறையாக ‘நடமாடும் தகன மேடை’

Thursday December 15, 2022 , 2 min Read

தமிழகத்தில் முதன்முறையாக ஈரோட்டில் ’நடமாடும் மயான சேவை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் வீடுகளுக்கே வரும் எரி தகன வாகனத்தின் மூலம் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கிராமப்புற மக்கள் சாதி மற்றும் இடப்பிரச்சனை காரணமாக மயானம், தகன மேடைகள் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகிவருவது இன்றளவும் தொடர்கிறது. சடலத்தை சுமத்துக்கொண்டு ஆற்றைக் கடந்தும், வயல் வெளிகளில் புகுந்தும் பல கிலோமீட்டர்கள் சென்று தகனம் செய்ய வேண்டியுள்ளது. இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறக்கட்டளை ஒன்று அற்புதமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Erode

’நடமாடும் மயான சேவை’

ஈரோட்டில் மாநகராட்சியுடன், ஆத்மா அறக்கட்டளை அமைப்பினர் இணைந்து 14 ஆண்டுகளாக நடத்தும் மின் மயானங்கள் மூலம் நகரப்பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேவையின் மூலமாக இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்களை இந்த அமைப்பு தகனம் செய்துள்ளது. இவர்களின் அடுத்த முயற்சியாக கிராமப்புற மக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கில் நடமாடும் எரியூட்டு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Erode

இதற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் திருச்சூரில் பிரத்யேகமாக தகன மேடை வடிவமைத்து கொண்டு வந்துள்ளனர். கிராமப்பகுதிகளில் எவ்வித சிரமமும் இல்லாமல் சடலத்தை ஒரு மணி நேரத்தில் விரைவாக எரித்து அஸ்தியை வழங்க முடியும் என்றும், விறகு அல்லது சாண வறட்டிகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கால விரயமும், கூடுதல் செலவும் இதில் தவிர்க்கப்படும் என்றும் ஆத்மா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆத்மா அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில்,

“கிராமப்புற மக்கள் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே, இறந்தவர்களின் வீடுகளுக்கே சென்று, குடியிருப்புப் பகுதிகள் இல்லாத இடத்தில் வைத்து சுகாதாரமான முறையில் எரியூட்ட உள்ளோம்,” எனத் தெரிவித்தார்.
Erode

தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எரிவாயு நடமாடும் தகன வாகனத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சேவையளிக்கவும், இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்த பின் தமிழகம் முழுவதும் ரோட்டரி சங்கங்களின் மூலம் கிராமப் புற மக்களுக்கு இந்த சேவையை விரிவுப்படுத்தவும் தொண்டு நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.