எவரெஸ்ட் பேஸ்கேம்ப், கிளிமாஞ்சாரோ சிகரங்களை ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி!
2022 ல், ஏழு வயதில் ஆத்யா பென்னூர், 17,598 அடி உயரத்தில் உள்ள மவுண்ட் எவரெஸ்ட் பேஸ்கேம்பில் ஏறி சாதனை படைத்தவர் இந்த ஆண்டு, கிளிமாஞ்சாரோ மலைச்சிகரத்தை மிகவும் இளம் வயதில் ஏறியவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
பெங்களூருவின் கிரீன்பீல்டு பொது பள்ளியின் எட்டு வயது மாணவி ஆத்யா பென்னூர் ஆப்பிரிக்காவில் உள்ள 19,340 அடி சிகரமான கிளிமாஞ்சாரோவை ஏறிய மிகவும் இளம் வயது நபராகக் கருதப்படுகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் எவரெஸ்ட் பேஸ் கேம்பை ஏறி சாதனை படைத்த நிலையில், இதை சாதித்திருக்கிறார்.
பெங்களூருவின் வெளிப்புற பகுதிகளில் உள்ள இடங்களுக்கு அவரது தந்தை ஹர்ஷாவுடன் டிரெக்கிங் சென்ற போது, ஆத்யாவின் மலையேறும் ஆர்வம் உண்டனாது. பெங்களூரு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட டென்சிங் ஜாம்லிங் நோர்கேவின் ஊக்கமான உரையை கேட்ட பிறகு, ஹர்ஷாவுக்கு 37 வயதில் மலையேறும் ஆர்வம் உண்டானது.
எட்மண்ட் ஹிலாரியுடன் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறிய டென்சிங்கின் மகன் தான் ஜாம்லிங். இந்த உரை மற்றும் ஜாம்லிங்குடனான உரையாடல் ஹர்ஷாவை புதிய பாதையில் அழைத்துச்சென்றது.

மலையேறும் ஆர்வம்
கர்நாடகாவில் உள்ள சிறிய ஹைக்கிங் பயணங்களுக்கு சென்ற போது, ஏழு வயதான ஆத்யாவின் உடல் தகுதி ஹர்ஷாவை வியக்க வைத்தது. பெருந்தொற்று காலத்தில், ஆத்யா உடல்தகுதியுடன் இருப்பதை அவர் உறுதி செய்தார். அதன் பிறகு, அவர் டென்னிஸ் விளையாடத்துவங்கினார்.
2017ல் எவரெஸ்ட் பேஸ் கேம்பை ஏறிய ஹர்ஷா, 2022ல் ஆத்யாவிடம் மலையேறுவதில் விரும்பம் உண்டா என விளையாட்டாகk கேட்டிருக்கிறார்.
“அதற்கு முன் பேஸ் கேம்ப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என் அப்பா அங்கு சென்றுள்ளார் எனத் தெரியும் அவ்வளவு தான். அங்கு செல்வது எத்தனை சுலபம் அல்லது கடினம் என்று தெரியாது. ஆனால் அப்பா என்னுடம் இருப்பார் என்று தெரிந்ததால் சரி என்றேன்,” என்று ஹெர்ஸ்டோரியிடம் கூறுகிறார் ஆத்யா.
அப்போது ஏழு வயதான ஆத்யா, ஒரு மாத காலம் பயிற்சி பெற்றார். வழக்கமாக செய்யும் படியேறும் உடற்பயிற்சி தவிர, மலையேறுவதற்காக நீந்தியதோடு, நீண்ட தொலைவு நடந்தார்.
“மலையேறுவதற்கு உடலின் கீழ் பகுதியில் அதிக வலு வேண்டும் என்றும் என் பாதங்கள் முடிவில்லாமல் நடக்க பழக வேண்டும் என்றும் புரிந்து கொண்டேன். மலையேறுவதற்காக ஒரு மாதம் தனி பயிற்சி பெற்று தயாரானேன்,” என்கிறார்.
நேபாளத்தின் லுக்லாவின் இருந்து மலையேறத்துவங்கிய போது, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது, நல்ல மழை பெய்து பாதையில் நிறைய பனிக்கட்டிகள் இருப்பதை கண்டார்.
“அங்கு நிறைய நாய்கள் இருந்தன. ஒரு குடிசையில் தங்கி, சிறிது சாக்லெட் சாப்பிட்டு, குளித்து அரிசி சாதம் சாப்பிட்டோம்,” என்கிறார் ஆத்யா.
பருப்பு சாதம், ஒவ்வொரு மணிக்கும் ஆற்றல் அளிக்கும் எனும் பாடலையும் ஆத்யா பயணத்தின் போது அறிமுகம் செய்தார். இந்த அப்பாவித்தனம் வியக்க வைத்தாலும் அவரது உறுதி அசாத்தியமானது. 17,598 அடியில் உள்ள எவரெஸ்ட் பேஸ்கேம்பை அடைய லூக்லாவில் இருந்து பத்து நாட்கள் மலையேற வேண்டும்.
பேஸ்கேம்ப் ஏறும் பருவம் பொதுவாக ஜூன் மாதம் நிறைவடையும். மலையேறும் பாதையில் அதிகம் பேர் இல்லை. ஆத்யா தந்தை மற்றும் வழிகாட்டிகளுடன் சென்றார்.
“எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பயணத்தை அவர் எளிதாக ஏறினார். தட்டையான பகுதிகளில் என் உயரம் காரணமாக ஆத்யாவுக்கு என்னால் ஈடு கொடுக்க முடிந்தது. ஆனால் செங்குத்தான இடங்களில் அவர் வேகமாக ஏறினார்,” என்கிறார் ஹர்ஷா.
அவர் முதல் நாளில் மட்டும் தான் களைப்பாக உணர்ந்து நிறைய அழுதார். ஆனால், இரண்டாம் நாள் முதல் எல்லாம் எளிதானது. பாதை மிகவும் அழகாக இருந்தது. சிகரத்தை தொடரும் வரை காட்சிகள் ரம்மியமாக அமைந்தன.
அதிகம் செல்லாத பாதை
இதன் பிறகு, ஆத்யா மீண்டும் தந்தையை பின் தொடர்ந்து செல்லத் தீர்மானித்தார். இந்த முறை ஆப்பிரிக்காவின் உயரமான சிகரம் கிளிமாஞ்சாரோவை தேர்வு செய்தனர்.
“என் தந்தை 2018ல் கிளிமாஞ்சாரோ ஏறியிருக்கிறார். நானும் அங்கு செல்ல விரும்பினேன். இதற்காகத் தயராக செங்குத்தாக செல்வதை தவிர்த்து, மீண்டும் நீச்சல் மற்றும் நீண்ட தொலைவு நடையில் கவனம் செலுத்தி மூன்று மாதம் பயிற்சி செய்தோம்,” என்கிறார் ஆத்யா.
தினசரி பயிற்சி சில நேரங்களில் கடினமாக இருந்தது என்றும், சில நேரங்களில் பயிற்சி செய்ய விரும்பவில்லை என்றும் ஒப்புக்கொள்கிறார். எனினும், பெற்றோர்கள் அவரை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய ஊக்குவித்துள்ளனர். இருப்பினும், இவை எல்லாம் அந்த தருணம் சார்ந்தவை அவர் மீண்டும் தனது பயிற்சிக்கு திரும்பிவிடுவார்.
“எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபாபா வழியே கிளிமாஞ்சாரோவில் சென்றிறங்கினர். மலையேறுவதற்காக உடன் வரும் அதிகாரப்பூர்வ குழுவை சந்தித்தனர். ஆனால் அவர்கள் விலகிக் கொள்ளவே, வழிகாட்டியுடன் நாங்கள் இருவர் மட்டும் சென்றோம்,” என்கிறார்.
சிகரத்தை அடைய ஐந்து வழிகள் உள்ளன. எளிய வழியில் சென்றால் 5-6 நாட்களில் உச்சியை அடைந்துவிடலாம் ஆனால், அது மலையேறுதலுக்கு சிறந்ததாக அமையாது என்கிறார் ஹர்ஷா. எனவே, அவர்கள் நீளமான, கடினமான லெமோஷோ பாதையை தேர்வு செய்தனர். ஏழறை நாட்கள் மலையேறினர். இந்த பாதையின் கடினமான அனுபவத்தை அவர் நினைவு கூர்கிறார்.
“தினமும் 10 மணி நேரம் மலையேறினோம். உச்சியை அடையும் நாளில், நள்ளிறவில் துவங்கினோம். அப்போது தான் தரையை காலை 11 மணிக்கு அடைய முடியும். அன்றைய தினம் 17 மணி நேரத்திற்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. எட்டு வயது குழந்தைக்கு இது மிகவும் கடினமானது. 20 டிகிரி மைனஸ் வெப்பம் இருந்ததால் இன்னும் சவாலானது,” என்கிறார்.

அதோடு ,விட்டுவிடலாம் எனும் நிலைக்கு சில நேரங்களில் அவள் வந்ததாக கூறும் ஹர்ஷா, மகளின் நிலையை பார்த்து தானும் அவ்வாறு நினைத்ததாக கூறுகிறார்.
ஆனால் எப்படியோ, இருவரும் தொடர்ந்து மலையேறுவதில் ஈடுபட்டு உச்சியை அடைந்தனர். இதனிடையே அந்த சிறுமி சுற்றுச்சூழல் தொடர்பாக கவலை கொண்டாள். குப்பை ஏதேனும் கண்டால் அதை கையில் எடுத்து பேஸ் கேம்பில் குப்பைத்தொட்டியை தேடி அதில் போடுவாள்.
“சாலைகள் அல்லது மலைகளில் மக்கள் குப்பை போடுவதை வெறுக்கிறேன்,” என்கிறார் ஆத்யா.
ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலையை அடுத்த இலக்காக கொண்டுள்ள ஆத்யா அதற்கான பயிற்சியை துவக்கியுள்ளார். அவருக்கு இன்னமும் மலை உச்சிகளும், சிகரங்களும் காத்திருக்கின்றனர்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்

‘எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண்' - தன் சிறுவயது கனவை முத்தமிழ்ச்செல்வி நினைவாக்கியது எப்படி?
Edited by Induja Raghunathan