Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தந்தையிடம் 10ஆயிரம் கடன் வாங்கி ‘சன் ஃபார்மா’ தொடங்கி, இந்தியாவின் 2வது பணக்காரர் ஆனது எப்படி?

இது பிரபல பிசினஸ் ஜாம்பவான் திலிப் சங்வி-ன் வெற்றிக்கதை.

தந்தையிடம் 10ஆயிரம் கடன் வாங்கி ‘சன் ஃபார்மா’ தொடங்கி, இந்தியாவின் 2வது பணக்காரர் ஆனது எப்படி?

Tuesday January 24, 2017 , 2 min Read

அவரது அப்பா மருந்துத் துறை வர்த்தகராக இருந்தார். அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று தொடங்கிய ஃபார்மா நிறுவனம், இன்று அவரை இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக ஆக்கியுள்ளது. இது பிரபல பிசினஸ் ஜாம்பவான் திலிப் சங்வி பற்றிய பின்னணிக்கதை. 


மும்பையில் பிறந்த திலீப், பின்னர் குடும்பத்துடன் கொல்கத்தாவிற்கு குடி பெயர்ந்தார். அங்கே அவர் தனது தந்தை செய்துவந்த ஃபார்மா மொத்த வியாபார தொழிலில் உதவியாக இருந்து வந்தார். கல்கத்தா பல்கலைகழகத்தில் பட்டத்தை முடித்தப்பின், திலீப் தன் சொந்த தொழிலை தொடங்கினார். ஒரே ஒரு ஊழியருடன் அவர் தொடங்கிய நிறுவனம், மனநல சம்பத்தப்பட்ட மாத்திரைகளை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வந்தது. பின்னர் மும்பைக்கு திரும்பிய அவர், அங்கே தனது முதல் பாக்டரியை குஜராத்தில் உள்ள வாபி என்ற இடத்தில் நிறுவினார். 

image
image

சொந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்ற எண்ணம் தனது தந்தைக்கு உதவிபுரிந்த போது உணர்ந்தார் திலீப். உடனே அதில் இறங்கி, தொழிலை தொடங்கி, தன் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி விற்கத்தொடங்கினார். தந்தையிடம் இருந்து பெற்ற கடன் பணத்தை வைத்துக்கொண்டே உலகின் மிகப்பெரிய ஃபார்மா நிறுவனமாக இன்று அறியப்படும் ‘சன் ஃபார்மாசூட்டிகல்’ நிறுவனத்தை 1982 இல் தொடங்கினார்.


குஜராத்தில் அமைந்த தனது பாக்டரியில், நண்பர் ஒருவரின் உதவியுடன் பொருட்கள் மற்றும் தேவையான இயந்திரங்களை நிறுவினார். மேலும் சிலரின் உதவியுடன், மனநலம் சம்பத்தப்பட்ட ஐந்து மருந்துகளை முதலில் வெளியிட்டார். 1994 இல் ஐபிஓ’விற்கு சென்ற சன் ஃபார்மா, தனது விற்பனையை 24 நாடுகள் அளவில் 1996 இல் அடைந்தது. 


2011 இல், ரான்பாக்சி, உலக வருமானமாக 2 பில்லியன் டாலரை தாண்டி, இத்தகைய வருமானத்தை பெற்ற முதல் இந்திய ஃபார்மா நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது. ஆப்தால்மாலஜி பிரிவில் நுழைய நினைத்த சன் ஃபார்மா, 1987 இல் மில்மெட் லாப்ஸ் என்ற உலகில் 108 ஆவது இடத்தில் இருந்த நிறுவனத்தை கையகப்படுத்தியது. தற்போது இவர்கள் உலகில் ஆறாவது இடத்தில் உள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் தங்களது ஆப்தால்மிக் தொழிலை தொடங்கியுள்ளது. 


திலீப் சன் ஃபார்மாவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தையில் விரிவாக்கம் செய்தார். ரான்பாக்சி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் அவரின் நிறுவனம் தேவைப்படும் மார்க்கெட்டை சென்றடையவும், புதிய சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்தது. 2012 இல் சன் ஃபார்மா, URL Pharma Inc. மற்றும் DUSA Pharmaceuticals Inc. ஆகிய இரண்டு நிறுவனங்களை கையகப்படுத்தி தங்களின் வல்லமையை நிலைநாட்டியது.


ப்ளூம்பர்க் டேட்டாவின் படி, திலீபின் மொத்த மதிப்பு 21.7 பில்லியான் டாலர்களாகவும், சன் ஃபார்மாவில் அவரது பங்குகள் 60.8 சதவீதம் ஆகும். இதன் மூலம் அவரது நிறுவனம் இந்தியாவில் முதல் இடத்திலும், உலகில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிசினஸ் ஸ்டாண்டர்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில், திலீப்,

“ஒரு சிறந்த தொழில்முனைவர், தனக்கான வாய்ப்பை பிறர் கண்களுக்கு படும் முன்னரே கண்டறிபவராகும். வாய்ப்புகளுக்காக முதலீடு செய்வதில் தயக்கம் காட்டாமல், ஒரு சிறந்த குழுவை உருவாக்கி, தனக்குள்ள தொலைநோக்கை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதை சரியாக செயல்படுத்தி, தொடர்ந்து கற்றுக்கொண்டு இருப்பவனே வெற்றியாளன்,” என்றார்.  

கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையின் காரணமாக சரியான திசை நோக்கி பயணித்து, சரியான முடிவை எடுத்ததால், இந்த இடத்தை அடைந்தவர் திலீப் சங்வி என்பதில் சந்தேகமில்லை. 

கட்டுரை: Think Change India