துரித வர்த்தக சேவை 'Tez'அறிமுகத்தை உடனடியாக செய்ய அமேசான் திட்டம்!
'Tez' என்னும் துரித வர்த்தகச் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலோ அல்லது 2025 தொடக்கத்திலோ அறிமுகம் செய்ய அமெசான் திட்டமிட்டுள்ளது
அமேசான் நிறுவனம் தனது துரித வர்த்தக சேவையான 'Tez'-ஐ விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 'தேஜ்' என்னும் துரித வர்த்தகச் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலோ அல்லது 2025 தொடக்கத்திலோ அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி, இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ‘தேஜ்’ துரித வர்த்தக சேவை தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைச் சாமான்கள் விநியோகமாக இருக்கும். இதற்காக அமேசான் டார்க் ஸ்டோர்களை அமைக்கிறது மற்றும் செயல்பாட்டிற்கான SKU-க்கள் மற்றும் வசதிகளை இறுதி செய்கிறது.
“இந்தியாவில் வரவிருக்கும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் இடத்தைப் பிடிக்க அடிப்படை முயற்சியில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்," இது தொடர்பாக யுவர்ஸ்டோரி அனுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்க Amazon India மறுத்துவிட்டது.
துரித வர்த்தகத் துறையில் முன்னிலையில் இல்லாத ஒரே பெரிய இணையவழி நிறுவனம் Amazon ஆகும். அதன் சக நிறுவனமான ஃபிளிப்கார்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'ஃப்ளிப்கார்ட் மினிட்ஸ்' அறிமுகப்படுத்தியது.
Tata குழுமத்தின் மின்வணிக சூப்பர் செயலியான Neu-ஐ இயக்கும் Tata Digital, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் துரித வர்த்தக சேவையான Neu Flash-ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், துரித வர்த்தக நிறுவனமான Zepto மோதிலால் ஓஸ்வாலின் தனியார் செல்வப் பிரிவு மற்றும் இந்திய குடும்ப அலுவலகங்களில் இருந்து $350 மில்லியன் திரட்டியது குறிப்பிடத்தக்கது.