நிலவில் 'ரோபோ கிராப்டை' களமிறக்கும் 26 வயது தீபனாவின் நம்பிக்கை!
இருபத்தியாறு வயதான தீபனா காந்தி, டீம் இந்தூஸின் உறுப்பினர். முந்நூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள கூகுள் லூனார் எக்ஸ் பரிசுப் போட்டிக்கு சர்வேதச அளவில் பங்கேற்ற 16 குழுக்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் கலந்துகொண்ட குழு இது மட்டுமே. தனியார் நிதியுதவியுடன் ரோபாட்டிக் கிராப்ட்டை டிசம்பர் 2017ல் நிலவுக்கு அனுப்பும் முயற்சி.
தீபனாவும்கூட ஆவணப்பட தொடரில் முக்கியமானவராக இருந்தார். போட்டியிடும் குழுக்களின் பின்னணி கதைகள் ஆராயப்பட்டன. மூன் ஷாட் என்ற தலைப்பில் அந்த தொடரை தயாரித்தவர் ஜேஜே. ஆப்ராம்ஸ், லாஸ்ட் என்கிற டிவி தொடரின் இணை படைப்பாளர் மற்று் கடந்த ஸ்டார் வார்ஸ்: த போர்ஸ் அவேக்கன்ஸ் படத்தின் இயக்குநர்.
“இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. நாங்களே அதற்கு சான்றாக இருக்கிறோம்” என்று அந்த ஆவணப்படத்தில் கூறுகிறார் தீபனா, ”இப்போது நிறைய பெண்கள், அறிவியல் மற்றும் வான் வெளி ஆய்வில் சிறந்து விளங்குகிறார்கள். விரைவில், இந்த துறையில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருப்பார்கள்.”
பெங்களூருவைச் சேர்ந்த விமான இயக்கவியல் குழுவான டீன் இந்தூசுடன் தன்னை தீபனா இணைத்துக்கொண்டார். விண்ணுக்குச் செலுத்தும் வாகனத்தில் இருந்து பிரிந்து வான்வெளியில் பறக்கும் ஸ்பேஸ்கிராப்ட்டை கட்டுப்படுத்தும் பணி அவருக்கு.
ஆப்ராம்ஸின் ஆவணப்படத்தை இயக்கியவர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் ஆர்லாண்டோ வான் ஐன்ஸிடெல், தீபனாவின் கதையை அவருடைய ஊட்டி பள்ளி நாட்கள் தொடங்கி, தற்போதைய அவரது நிலவுப் பணி வரையில் தேடினார். சிறு வயதிலேயே அவர் கணக்கில் சூரப்புலியாக இருந்திருக்கிறார். “கணக்கு அறிவியலுடன் கலந்திருப்பது வெகு அழகு” என்கிறார் தீபனா. சிறு நகரத்துப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு அவர் விண்வெளியைப் பற்றிச் சொல்லித்தரும் காட்சி ஆவணப்படத்தில் வருகிறது. இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதுபோன்ற துறையில் மிகப்பெரிய சாதனைகள் செய்வதற்கு ஏற்கெனவே உள்ள பாலின பாகுபாட்டை உடைத்தெறிய வேண்டும் என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
”இது என்னுடைய பத்து ஆண்டு கனவு, அதை உணர்வதற்கு விரல்கள் குறுக்கிட்டன, ஆனால் நாங்கள் உயரத்தைத் தொடுவதற்கு மிகச்சிறந்த ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்வோம்” என்று தொடங்குகிறார் தீபனா.
கூகுள் லூனார் எக்ஸ் பரிசு என்பது 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. யாரால் தனியார் முதலீட்டுடன் கிராப்டை நிலவுக்கு அனுப்பமுடியுமோ அந்த குழுவுக்கு விருது வழங்குகிறது. அதன் வெளிப்புறத்தில் 500 மீட்டர் அலைந்து உயர்தரமான புகைப்பட்டங்களையும் விடியோ காட்சிகளையும் அனுப்பவேண்டும்.
இந்தப் பரிசைப் பெறுவதற்கான போட்டியில் மூன்று குழுக்களில் டீம் இந்தூசும் ஒன்று. அவர்கள் பணமாக 1 மில்லியன் பெற்றுவிட்டார்கள். அவருடைய விண்வெளி மீதான காதல் பற்றி தீபனா விரிவாகப் பேசுகிறார்,
“என் இளம் பருவத்தில் இருந்து, விண்வெளிமீது பெரும் விருப்பம் கொண்டிருந்தேன். படித்துக்கொண்டும், படங்களைப் பார்த்துக்கொண்டும் இருப்பேன். விண்வெளி தொடர்பான எல்லாவற்றையும் நேசித்தேன். பிறகுதான் முதுநிலைப் படிப்பை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தேன். என் பயிற்சியை இஸ்ரோவில் செய்தேன். அப்போதுதான் சவால்கள் நிறைந்த இந்தத் துறையில் மிகச்சிறந்த ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்று உறுதிகொண்டேன்” என்கிறார் தீபனா.
தமிழில்: தருண் கார்த்தி