இந்திய ‘யூனிகார்ன்’ நிறுவனர்கள் கற்று தரும் 8 பிசினஸ் பாடங்கள்!
இ-காமர்ஸ் முதல் ஃபின்டெக் வரை, யூனிகார்ன் நிறுவனர்கள் இந்திய சந்தைகள், பாரம்பரிய முறைகளை மாற்றி உலகளாவிய ஸ்டார்ட்-அப் மேப்பில் இந்தியாவுக்கான தனி இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்தியாவின் பில்லியன் டாலர் மதிப்பை எட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், வெறும் வணிக மையங்கள் மட்டும் அல்ல; அவற்றை உருவாக்கிய தொழில்முனைவோர்களின் பின்னடைவு, புதுமை போன்றவற்றுக்கு சான்றும் கூட. இ-காமர்ஸ் முதல் ஃபின்டெக் வரை, யூனிகார்ன் நிறுவனர்கள் இந்திய சந்தைகளை முற்றிலுமாக மாற்றி, பாரம்பரிய முறைகளை மாற்றி உலகளாவிய ஸ்டார்ட்-அப் மேப்பில் இந்தியாவுக்கான தனி இடத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
யூனிகார்ன் நிறுவனங்களின் இந்த வெற்றிக்கு காரணமான பயணங்கள் என்பது பல கஷ்டங்களை உள்ளடக்கியது. அப்படியான பயணங்கள் ஆர்வமுள்ள ஒவ்வொரு தொழில்முனைவோரையும் ஊக்குவிக்கும். அவர்களின் வாழ்க்கை, பிசினஸை உருவாக்குவதற்கு தேவையான உத்திகளை மட்டும் வெளிப்படுத்துவதில்லை.
அவர்கள் சந்தித்த பின்னடைவுகள், அப்போது இருக்க வேண்டிய மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.
இங்கே, இந்திய யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் பகிர்ந்த 8 முக்கிய பிசினஸ் பாடங்களை தெரிந்துகொள்வோம்.
1. உண்மையான பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்கவும்
ஓலா, ஜோமாட்டோ போன்ற பல இந்திய யூனிகார்ன்கள் சந்தையில் இருந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தொடங்கின. போக்குவரத்து முதல் உணவு விநியோகம் வரை மில்லியன் கணக்கான மக்களை பாதித்த ரியல் பிரச்சினைகளை கையாண்டதால் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அன்றாடச் சிக்கலைத் தீர்த்ததன் மூலம், தங்களின் சேவைகள் விருப்பத்துக்கு மட்டுமல்ல, அத்தியாவசியமானது என்பதையும் இந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்தின.
நீங்கள் இருக்கும் தொழிலிலோ அல்லது சமூகத்திலோ இருக்கும் பிரச்சனைகளை கவனியுங்கள். அவற்றுக்கு தீர்வைத் தேடுங்கள்.
நீண்டகால சிக்கலை தீர்க்கும் தயாரிப்புகளோ, சேவைகளோ வாடிக்கையாளர்களை எளிதில் கவரவைக்கும் வாய்ப்புகளை உருவாக்கலாம்.
2. மாற்றத்தை தழுவுதல்
பைஜு ரவீந்திரன் போன்ற நிறுவனர்கள் வாடிக்கையாளர்களின் பழக்கவழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக தொற்றுநோய்களின்போது ஆன்லைன் கல்வி கற்பது அதிகரித்தது. இது மாதிரியான மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல் விரைவாக தங்களை மதிப்பிட உதவுவதுடன் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னிலை கொடுக்கவும் உதவுகிறது.
எனவே, மாற்றத்துக்குத் தயாராக இருங்கள். தேவைப்படும்போது உங்கள் பிசினஸ் மாடலை முன்னிலைப்படுத்த தயாராக இருங்கள்.
3. பெரியதாக சிந்தியுங்கள், சிறியதாகத் தொடங்குங்கள்
இந்திய யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் தங்கள் நிறுவனங்களை தொடக்கத்திலேயே பில்லியன் டாலர் நிறுவனமாக தொடங்கவில்லை. மாறாக, சின்ன நிறுவனமாகவே தொடங்கினர். சிறியதாக தொடங்கினாலும் உறுதியான அடித்தளத்தை அமைப்பதில் கவனம் செலுத்தினர்.
உதாரணமாக, ஃபிளிப்கார்ட். ஒரு ஆன்லைன் புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்ட ஃபிளிப்கார்ட் இப்போது உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக உள்ளது.
எதையும் ஒருவித பிரஷரோடு தொடங்க வேண்டியதில்லை. முதலில் சிறியதாக தொடங்கவும், குறைகளை சரிசெய்து உங்கள் தயாரிப்பை முழுமைப்படுத்தவும், பின்னர் சந்தைக்கு தகுந்தவாறும், வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கு ஏற்றுவாறு நிறுவனத்தை விரிப்படுத்தவும் செய்யுங்கள்.
4. வாடிக்கையாளர் அனுபவத்தில் கவனம்
Swiggy மற்றும் Paytm போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் சேவைகளில் திருப்தி அளித்து வளர்ச்சியடைந்தவை ஆகும். உதாரணத்துக்கு, ஸ்விக்கி டெலிவரி நேரம் உட்பட பலவற்றை மேம்படுத்திவதில் சிறப்பு கவனம் செலுத்தியது. இது ஸ்விக்கிக்கென தனி வாடிக்கையாளர் தளத்தை உருவாக்க உதவியது.
உங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும்போது உங்கள் வாடிக்கையாளர்களின் குறைகளை கேளுங்கள். மேலும், வாடிக்கையாளர்களுக்கான செயல்முறைகளை எளிதாக்குங்கள். குறைகளுக்குத் தேவையான தீர்வை கொடுத்து, அதன்மூலம் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களே வணிகத்தை உயர்த்துவதற்கும் வாய்வழி விளம்பரத்துக்கும் உதவுவார்கள்.
5. திறமையான குழுவை உருவாக்குங்கள்
வெற்றியடைந்த யூனிகார்ன் நிறுவனர்கள் பலரும் வலியுறுத்துவது, சரியான நபர்களை பணியமர்த்துவததையும் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த குழுவை உருவாக்குவதையும் தான். நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையையும் மதிப்புகளையும் பகிர்ந்து கொள்ளும் குழுவை உருவாக்கியதே தங்களின் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் Razorpay போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள்.
சவால்களை எதிர்கொள்வதற்கும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துவதற்கும் நம்பிக்கையான ஒரு குழு அவசியம். எனவே, உங்களின் பணியால் ஈர்க்கப்பட்டு, நிறுவனத்தின் மதிப்புகளை அறிந்து அவற்றுடன் ஒத்துப்போகும் நபர்களை வேலைக்கு அமர்த்துவதில் கவனம் செலுத்துங்கள்.
6. மூலதனத்தை உயர்த்துங்கள்
ஒரு நிறுவனத்துக்கு மூலதனம் இன்றியமையாதது. எனினும், Zerodha போன்ற நிறுவனங்கள் கூடுதலாக கிடைக்கும் வெளிப்புற நிதியை மட்டும் நம்பியிருக்காத நிலையான பிசினஸ் மாடல்களை உருவாக்கி வெற்றி கண்டனர். இந்தியாவின் மிகப் பெரிய பங்குச்சந்தை வர்த்தக நிறுவனமான Zerodha, முதலீட்டாளர்களை அதிகம் சார்ந்திருக்காமல் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது.
மூலதனத்தை அதிகரிப்பது வளர்ச்சியை துரிதப்படுத்தலாம், ஆனால், நிதி சுதந்திரம் மட்டுமே நிறுவனத்தின் ஆயுளை உறுதி செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நிதியுதவியை நம்பாமல், நிலையான அதேநேரம் உங்களுக்கான பிசினஸ் மாடலை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.
7. தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
பல யூனிகார்ன் நிறுவனர்கள் வெற்றியை அடைவதற்கு முன்பு தோல்விகளை சந்தித்தனர். எடுத்துக்காட்டாக, குணால் ஷாவின் முதல் ஸ்டார்ட்அப், `ஃப்ரீசார்ஜ்` (FreeCharge) வெற்றிகரமான டிஜிட்டல் வாலட்டாக மாறுவதற்கு முன் பல சிரமங்களை சந்தித்தது. இந்த பின்னடைவுகளும், சிரமங்களும் நிறைய பாடங்களை கற்பித்தன. குறிப்பாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கான உத்தியில் நிறைய படிப்பினைகளை கற்றுக்கொடுத்தது.
தோல்விகளை கற்றுகொள்ளுவதற்கான வாய்ப்புகளாக கருதுங்கள். ஒவ்வொரு தவறும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்குகிறது. நீங்கள் சிந்திக்கவும் மாற்றியமைக்கவும் உங்களுக்கு நேரத்தை அது வழங்குகிறது.
8. உலகளாவிய கண்ணோட்டத்துடன் புதுமைகளை ஏற்படுத்துங்கள்
OYO மற்றும் Freshworks போன்ற நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளை ஈர்க்கும் தயாரிப்புகளை உருவாக்கின. OYO நிறுவனர் ரித்தேஷ் தனது சேவையை உலக அளவில் மதிப்பிடும் வகையிலான பிசினெஸ் மாடலை உருவாக்கினார். எனவே, உள்ளூர் சந்தையை மட்டும் சிந்திக்காமல், உங்களின் தயாரிப்பு மற்றும் சேவைகளை சர்வதேச சந்தை மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப வடிவமையுங்கள். ஏனெனில் அவை ஒரு நாள் உங்களுக்கு நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாடிக்கையாளர்களை கிடைக்க வழிவகை செய்யும்.
ஒரு பில்லியன் டாலர் நிறுவனத்தை உருவாக்குவது எளிதானது அல்ல. பின்னடைவு, வாடிக்கையாளர் கவனம், புதுமை ஆகியவற்றிலிருந்தே வெற்றி கிடைக்கிறது என்பது இந்திய யூனிகார்ன் நிறுவனர்கள் கற்பிக்கும் பாடங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் ஒரு புதிய தொழில்முனைவோராக இருந்தாலும் சரி அல்லது அனுபவமிக்க நிபுணராக இருந்தாலும் சரி, இந்த பாயின்டுகளை தெரிந்துகொள்வது உங்களின் பிசினஸ் வாழ்க்கையை வழிநடத்த உதவும். ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்பும் தனித்துவமானது தான். ஆனால், வெற்றியைக் கொடுக்கும் கொள்கைகள் பெரும்பாலும் உலகில் பொதுவானவையே. இதனை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனர்களின் இந்த படிப்பினைகள், வெற்றி என்பது பின்னடைவு, வாடிக்கையாளர் கவனம், புதுமை மற்றும் மாற்றியமைக்க விருப்பம் ஆகியவற்றின் கலவையிலிருந்து உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.
மூலம்: சானிய அகமது கான்
Edited by Induja Raghunathan