புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கக்கூடிய பொருளை உருவாக்கிய ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்!
நித்ய கல்யாணி செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் நானோ அளவுகொண்ட கார்பன் பொருட்கள் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு பயன்படும் என கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் செல்களை கண்டறிந்து அதேசமயம் அழிக்கக்கூடிய கார்பன் நானோபொருட்களை உருவாக்கியுள்ளனர்.
புற்றுநோயைக் கண்டறிவதிலும் சிகிச்சைக்கும் உதவக்கூடிய நானோ அளவிலான (10-9 மீட்டர்) கார்பன் பொருள் நித்ய கல்யாணி செடியின் இலையில் இருந்து எடுக்கப்பட்டதாக பிடிஐ தெரிவிக்கிறது.
"புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் இதுபோன்ற முயற்சிகள் புதிய முன்னுதாரணமாக விளங்கும். இந்த நானோபொருட்களைக் கொண்டு புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அதேசமயத்தில் இமேஜிங் அமைப்பு மூலம் கண்காணித்து அந்த செல்களை அழிக்கவும்முடியும்,”
என்றார் இக்குழுவிற்கு தலைமை தாங்கும் பி. கோபிநாத். டாக்டர் கோபிநாத் குழு நித்ய கல்யாணி செடியின் இலைகளை சூடாக்கி ”ஹைட்ரோதெர்மல் ரியாக்ஷன்” என்கிற செயல்முறை வாயிலாக கார்பன் நானோடாட்களை ஒன்றிணைக்கிறது என என்டிடிவி தெரிவிக்கிறது.
”அடுத்தகட்டமாக இந்த நானோபொருட்கள் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுவது குறித்து மேலும் ஆய்வு செய்ய விலங்குகள் மீது ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB), பயோடெக்னாலஜி துறை (DBT), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் போன்றவை ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்விற்கு ஆதரவளித்து வருகிறது.
”பல ஆண்டுகளாகவே புற்றுநோய்கான மருந்து ஆராய்ச்சியில் புற்றுநோய் செல்களைக் கண்டறிவதிலும் அதனை அழிப்பதிலும் புற்றுநோய் மருத்துவத் துறை தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது கடந்த சில ஆண்டுகளாக நானோ தொழில்நுட்பம் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.”
”கட்டிகளுக்கான மாலிக்யூலர் இமேஜிங், மாலிக்யூலர் கண்டறிதல் மற்றும் இலக்காகக்கொண்டுள்ள சிகிச்சைமுறை போன்றவற்றில் நானோமீட்டர் (10-9 மீட்டர்) அளவில் இருக்கும் நானோபொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து அதிகளவில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது,” என்று கோபிநாத் குறிப்பிட்டார்.
கட்டுரை : THINK CHANGE INDIA