Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் 5 நிறுவனங்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தீர்வுகளை உருவாக்கியுள்ள 5 நிறுவங்களைப் பற்றிய தொகுப்பு இது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் 5 நிறுவனங்கள்!

Friday December 17, 2021 , 2 min Read

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பட எத்தனையோ தனிநபர்களும் அரசாங்கமும் அரசு சாரா நிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது.

1

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் செயல்படும் 5 நிறுவனங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்:

1.     BleeTech Innovations

இண்டஸ்ட்ரியல் டிசைனர்களான நுபுரா கிர்லோஸ்கர், ஜானவி ஜோஷி இருவரும் சேர்ந்து BleeTech Innovations நிறுவியுள்ளனர். இந்நிறுவனம் டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காது கேளாதோருக்கான புதுமையான தீர்வுகளை வழங்குகிறது. Blee TV, Blee TV Library ஆகிய இரண்டும் இந்நிறுவனத்தின் முக்கியத் தொழில்நுட்பத் தீர்வுகள் ஆகும்.

2

Blee TV ஒரு இலவச ஆண்ட்ராய்ட் மொபைல் செயலி மற்றும் வெப் போர்டல். நிதி சார்ந்த அறிவு, நடப்பு நிகழ்வுகள், ஆங்கில மொழி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்திய சைகை மொழியில் உதவி போன்றவை தொடர்பான உள்ளடக்கங்களை வழங்குகிறது. Blee TV Library குழந்தைகளுக்குத் தேவையான உள்ளடக்கங்களைத் தொகுத்து வழங்கும் தளம்.

2.     Neo Motion

மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களை சார்ந்திருக்காமல் தற்சார்புடன் வாழ இந்நிறுவனம் உதவுகிறது. 2016-ம் ஆண்டு ஸ்வோஸ்திக் தாஷ், சுஜாதா ஸ்ரீனிவாசன் ஆகியோர் இந்நிறுவனத்தை நிறுவியுள்ளனர். ஸ்வோஸ்திகா தாஷ் ஐஐடி முன்னாள் மாணவர். டாக்டர் சுஜாதா ஸ்ரீனிவாசன் ஐஐடி மெட்ராஸ் மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையின் பேராசிரியர்.

3

இந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகளின் தனித்தேவைக்கேற்ற சக்கர நாற்காலிகளையும் அவர்களுக்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களையும் வழங்குகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியின்றி சுதந்திரமாக நகர்ந்து செல்லலாம்.

3.     Inali Foundation

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு Inali Foundation எலக்ட்ரானிக் கைகளை இலவசமாக வழங்குகிறது. பிரசாந்த் கடே நிறுவியுள்ள இந்த லாப நோக்கமற்ற நிறுவனம் 3,500-க்கும் மேற்பட்டோர் தற்சார்புடன் வாழ உதவியுள்ளது.

4

இந்தக் குழுவினர் பல்வேறு முன்வடிவங்களை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய முதல் வெர்ஷனில் ஒரு பட்டனின் உதவியுடன் உள்ளங்கையை மூடவும் திறக்கவும் முடியும். அதுமட்டுமின்றி தண்ணீர் குடிப்பது, எழுதுவது உள்ளிட்ட அடிப்படை வேலைகளை செய்துகொள்ள இந்த முதல் வெர்ஷன் உதவுகிறது. இரண்டாவது வெர்ஷன் சற்று மேம்பட்டது. இதில் கைகளில் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார் மூளை கொடுக்கும் சமிக்ஞைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப கைகளில் இருக்கும் மோட்டாரை இயக்கும்.

4.     VAANI Foundation

VAANI Deaf Children’s Foundation சைகை மொழி மற்றும் தகவல் தொடர்பில் கவனம் செலுத்துகிறது. கேட்கும் திறன் குறைபாடுள்ள ஒவ்வொரு குழந்தையும் மற்றவர்களுடன் பேசி, கற்றுக்கொண்டு, வளர்ச்சியடைய வாய்ப்பளிக்கவேண்டும் என்பதே இந்த ஃபவுண்டேஷனின் நோக்கம்.

5

கேட்கும் திறனில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சில நுட்பங்களைக் கலவையாகப் பயன்படுத்தி மொழியைக் கற்றுக்கொடுக்கலாம் என்பதை இந்த ஃபவுண்டேஷன் வலியுறுத்துகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த ஃபவுண்டேஷன் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்கிறது.


இதனால் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இடையில் இருக்கும் உறவு வலுப்படும்.

5.     Mind Assets

6

மைத்ரி ஷாவிற்கு பிறவியிலேயே தசை சிதைவு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவர் 2017-ம் ஆண்டு Mind Assets நிறுவினார். இந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் வாய்ப்புகளை வழங்குகிறது. நிறுவனங்கள் தகுதியான நபர்களுடன் இணைய Mind Assets உதவுகிறது.


ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா