Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தொழில்முனைவோர் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய 5 புத்தகங்கள்!

தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகளும் குறிப்புகளும் Entrepreneurship 101 என்கிற தொடர் மூலம் தொகுத்து வழங்குகப்படுகின்றன.

தொழில்முனைவோர் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய 5 புத்தகங்கள்!

Wednesday June 15, 2022 , 4 min Read

ஒரு வணிகத்தை சிறப்பாக நடத்த ஏராளமான திறன்கள் அவசியம். ஒரு தொழில்முனைவர் முழு ஊக்கத்துடன் இருந்தால் மட்டுமே அவரது குழுவில் இருப்பவர்கள் மனதிலும் அதே அளவு ஊக்கத்தை விதைக்கமுடியும்.

ஆனால், தொழில்முனைவோர் ஊக்கமிழந்து, சோர்வடைந்திருக்கும் நாட்களில் பெரும்பாலும் புத்தக வாசிப்பை கையிலெடுப்பதுண்டு.

1

வெற்றிக் கதைகளைப் படிக்கும்போதே மனதில் உற்சாகம் பிறக்கும். சோர்வு மறைந்துவிடும்.

உற்சாகமாக இருக்கும் நாட்களில் மட்டுமில்லாமல் சோர்வுற்றிருக்கும் நாட்களிலும் தொழில்முனைவோர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளிக்கும் 5 புத்தகங்களை Entrepreneurship 101 பட்டியலிட்டுள்ளது.

Zero To One

பிரபல தொழில்முனைவரும் முதலீட்டாளருமான பீட்டர் தியேல், பிளேக் மாஸ்டர்ஸ் இருவரும் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, தொழில்முனைவோர் ஒவ்வொருவரும் தங்களது தொழில்முனைவு பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு படிக்கவேண்டும்.

1

எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற பிரபல வணிகத்தலைவர்கள் இந்த புத்தகத்தை பரிந்துரை செய்கின்றனர். இந்தப் புத்தகம் புத்தாக்க சிந்தனைக்கு புது வடிவம் கொடுக்கிறது எனலாம். எதிர்பாராத இடங்களில் வாசகர்களைக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது.

சக போட்டியாளர்களுடன் அவர்களில் ஒருவராக பந்தயத்தில் ஓடாமல் தனித்துவமான பாதையை உருவாக்கிக்கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. இந்தப் புத்தகம் பற்றிய விளம்பரத்தில்,

அடுத்த பில் கேட்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்க மாட்டார். அடுத்த லேரி பேஜ் அல்லது சர்ஜண்ட் பிரின், சர்ச் என்ஜின் உருவாக்க மாட்டார். நீங்கள் இவர்களைப் போலவே செய்தால், நீங்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்பது அர்த்தம். புதிதாக ஒன்றை உருவாக்குவதைக் காட்டிலும் ஏற்கெனவே இருக்கும் ஒரு மாதிரியை அப்படியே நகல் எடுப்பது எளிது. ஒரு விஷயத்தை எப்படி செய்வது என்று நமக்குத் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். தெரிந்த அந்த விஷயத்தையே செய்வது என்பது 1 to n போன்றது. ஒவ்வொரு புதிய படைப்பும் 0 to 1 போன்றது. இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை உணர்த்துகிறது Zero To One.

How To Win Friends And Influence People

சுய உதவிப் புத்தகங்களில் மிகச்சிறந்த புத்தகமாக இதைக் குறிப்பிடலாம். டேல் கார்னகி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். 1930-களில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் இன்றளவும் மக்களால் விரும்பி வாசிக்கப்படுகிறது.

1

சர்வதேச அளவில் மிகச்சிறப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ள இந்தப் புத்தகம் 31 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

மக்களை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படிக் கையாள்வது போன்ற நுணுக்கங்களை இந்தப் புத்தகத்தின் மூலம் புரியவைக்கிறார் கார்னகி.

பெருந்தலைவர்கள் மட்டுமே தங்களது யோசனைகளை சிறப்பாக வெளிப்படுத்தி, தலைமைப் பொறுப்பேற்று, மக்களை உற்சாகமாக மாற்றக்கூடியவர்கள் என்கிறார் கார்னகி. எனவே, இந்தத் திறன்களை தனது புத்தகத்தின் மூலம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். கீழ்கண்ட ஆறு பகுதிகளாக அவற்றைப் பிரித்துள்ளார்.

  1. மக்களைக் கையாள்வதற்கான அடிப்படை நுட்பங்கள்
  2. மக்கள் உங்களை விரும்ப வைப்பதற்கு உதவும் ஆறு வழிமுறைகள்
  3. உங்கள் சிந்தனைக்கு ஏற்ப மக்களை வென்றெடுப்பது எப்படி?
  4. தலைமைப் பொறுப்பு: குற்றம் சாட்டாமல், எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் மக்களை மாற்றுவது எப்படி?
  5. பிரமாதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கடிதங்கள்
  6. இல்லற வாழ்க்கையை இனிமையாக்க உதவும் ஏழு விதிகள்

Why We Sleep

Why We Sleep: The New Science of Sleep and Dreams புத்தகத்தை மேத்யூ வாக்கர் எழுதியிருக்கிறார். இவர் UC Berkeley (Centre for Human Sleep Science) இயக்குநர்.

எட்டு மணி நேர தூக்கம் இல்லாமல் போனால் ஒருவரது வாழ்க்கைத் தரம் எப்படிக் குறைந்துபோகும் என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இதை மையமாகக் கொண்டே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

1
ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லாமல் போனால் அவரது படைப்பாற்றல் திறன் பாதிக்கப்படும். முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். ஞாபகச் சக்தி குறையும். இதயமும் மன நலனும் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பாற்றல் கடுமையாக பாதிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேல் ஆயுள் குறையும்.

ஓய்வெடுக்காமல் தூக்கத்தையும் கெடுத்துக்கொள்ளும் தொழில்முனைவோர்கள் இந்தப் புத்தகத்தை நிச்சயம் படிக்கவேண்டும்.

ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள் ஒரு கணம் ஓட்டத்தை நிறுத்திவிட்டு உடல் மற்றும் மனநலனில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்கு நினைவுபடுத்துகிறது. பில் கேட்ஸ் இந்தப் புத்தகத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்:

“Why We Sleep புத்தகத்தைப் படிக்க நான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட அதிகம் எடுத்துக்கொண்டேன். காரணம் நான் வாக்கரின் அறிவுரையை முறையாக பின்பற்றி அதிக நேரம் கண்விழித்துப் படிக்காமல் விரைவாகவே படுக்கைக்கு சென்றுவிட்டேன். பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பன போன்ற பல விஷயங்களை வாக்கர் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். நீங்கள் இதை வாசித்தால் இதே பலன் உங்களுக்கும் கிடைக்கும்,” என்று அந்த குறிப்பில் எழுதியிருக்கிறார்.

7 Habits of Highly Effective People

ஸ்டீஃபன் ஆர் கவி (Stephen R Covey) எழுதியுள்ள 7 Habits of Highly Effective People புத்தகம் தொழில்முனைவோர் தங்களது இலக்குகளை சிறப்பாக எட்ட உதவுகிறது.

தொழில்முனைவோர் தங்கள் இலக்குகளையும் தங்கள் குணாதிசயங்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும்போது இலக்குகளை திறம்பட எட்ட முடியும் என்கிறார். மேலும், துணிச்சல், நேர்மை, மரியாதை, அறம் போன்ற பிற அம்சங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.

1

ஒவ்வொரு மனிதனும் நிறைவான வாழ்க்கையை வாழ கீழ்கண்ட ஏழு பழக்கங்களைப் பின்பற்றவேண்டும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

  1. எப்போதும் முனைப்புடன் இருக்கவேண்டும்.
  2. முடிவை மனதில் நிர்ணயித்துவிட்டு தொடங்கவேண்டும்.
  3. செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கவேண்டும்.
  4. எல்லோருக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படவேண்டும்.
  5. மற்றவர்களுக்கு நம்மைப் புரியவைப்பதற்கு முன்பு நாம் மற்றவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.
  6. சிறப்பாக ஒன்றிணைக்கவேண்டும்.
  7. திறன்களை கூர்மைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

The Hard Things About Hard Things

The Hard Things About Hard Things: Building A Business When There Are Easy Answers என்கிற புத்தகத்தை எழுதியவர் பென் ஹோரோவிட்ஸ். இவர் Andreessen Horowitz என்கிற வென்சர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ. இந்தப் பயணத்தில் தான் சந்தித்த சவால்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

1
ஒரு வணிகத்தை தொடங்குவதுதான் மிகவும் கடினமான பகுதி என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், அதைவிடக் கடினமானது அந்த வணிகத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று ஹோலோவிட்ஸ் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தொழில்முனைவுப் பயணத்தின் மிகவும் கடினமான சவால்களை எப்படி திறம்படக் கையாளலாம் என்பதற்கான குறிப்புகளை தன்னுடைய தொழில்முனைவுப் பயணத்தின் வாயிலாக பகிர்ந்துகொள்கிறார் ஹோரோவிட்ஸ்.

ஆங்கில கட்டுரையாளர்: தெபோலினா பிஸ்வாஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா