திறந்த வெளியில் உடற்பயிற்சிக்கு அதிகரிக்கும் மவுச!
சென்னை கட்டடக்காடுகளுக்கு நடுவே ரம்யமான சூழலில் நம் ஆரோக்கியத்தை அதிகரிக்க வெட்டவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த உடற்பயிற்சிக் கூடம் அமைந்திருக்கும் இடம் போரூர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய அதிநவீன காலகட்டத்தில் போதிய உடற்பயிற்சிகள் மேற்கொள்ள நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றோம் பல்வேறு உடல் உபாதைகளுடன்.
கால மாற்றத்திற்கேற்ப புதிய நோய்களின் வருகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதற்கு முக்கியக் காரணம் இன்றைய தலைமுறையினரிடம் உடற்பயிற்சி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே.
வீட்டில் ஏசி ரூமில் லேப்டாபுடனும், செல்போனுடனும் நேரம் செலவழிக்க முடிந்த பலருக்கும் 10 நிமிடங்கள் கூட நடைபயிற்சி செய்து உடல் பலத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றாமல் இருப்பது ஆச்சர்யம் தான். உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்ஜினியரிங் மாணவரான கார்த்திகேயனின் முயற்சியில் உருவாகியுள்ளது இந்த Fun Functional Gym.

உடற்பயிற்சியாளர் கார்த்திகேயன்
கார்த்திகேயனிடம் இந்த வெட்டவெளி உடற்பயிற்சிக் கூடம் குறித்து கேட்டபோது, புத்துணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.
“இந்த காலகட்ட இளைஞர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு நடுவே தான் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நிச்சயம் சிறிது ஓய்வு தேவை. அறிவியல் பூர்வமான உடற்பயிற்சிகளை விட வேடிக்கையுடன் கூடிய உடல் அசைவுகள் உடலுக்கும் மனதுக்கும் நல்ல புத்துணர்வை தரும்.”
கல்லூரி படிப்பு முடிந்ததும், ஐடி துறையில் வேலை கிடைத்தது. எனக்கு உடற்பயிற்சி குறித்து மேல் படிப்பு படிக்கும் எண்ணம் தோன்றியது. என் பெற்றோரும் இதற்கு சம்மதித்தனர். AMERICAN COUNCIL OF EXERCISE இல் சேர்ந்து உடற்பயிற்சி குறித்த எனது பார்வையை மேலும் விரிவாக்கிக் கொண்டேன். படிப்பை முடித்ததும், சவேரா, ஹயத் உள்ளிட்ட ஸ்டார் ஹோட்டல்களில் ஜிம் ட்ரெயினராக வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். பின்பு விளையாட்டு வீரர்களுக்கு strength and conditioning பயிற்சி கொடுக்கும் வாய்ப்பு ராமசந்திரா மருத்துவமனை மூலம் கிடைத்தது.
விளையாட்டு வீரர்களின் உடல் தகுதியை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும். 2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு உடற்பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்க்கையை வேறு பாதைக்கு கொண்டு சென்றது. தனியாக வெட்ட வெளியில் சுத்தமாக காற்றோற்றத்துடன் உடற்பயிற்சியை கற்றுத்தர யோசித்தேன்., அதன் எதிரொலிதான் இந்த FUN FUNCTIONAL GYM, என்று பகிர்கிறார்.
இங்கே 6 வயது சிறுவர்கள் முதல் பயிற்சி அளித்து வருகிறோம். TRX SUSPENSION TRAINING, KETTLE BELL , BATTLE ROPE உள்ளிட்ட ஸ்ரெஸ் பிரீ உடற்பயிற்சிகள் மட்டுமே சொல்லிக்கொடுக்கின்றேன். குறிப்பாக எந்தவித கருவிகளும் இன்றி சூரிய ஒளியில் பயிற்சிகள் செய்யப்படுவதால் உடலிற்கு தேவையான வைட்டமின்–டி யும் கிடைக்கிறது.
விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் முக்கியமானது நல்ல உடல் தகுதிதான். அவர்களுக்கென பிரத்யேக பயிற்சியும் இங்கே வழங்கி வருகின்றேன். தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இருந்து என்னிடம் பயிற்சி பெற வீரர்கள் சிலர் வருகின்றனர். ஒலிம்பிக் கனவோடு பல சிறுவர்கள் இங்கு பயிற்சி பெற வருவது எனக்கு மன மகிழ்ச்சியை தருகின்றது. ஓட்டப்பந்தயம், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளை வழங்கி வருகிறேன், என்கிறார், கார்த்திகேயன்.
உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா, சீனாவையடுத்து மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க உடல் பருமனும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. உடல் பருமன் நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்பருமனுக்கு உணவுப்பழக்கமும் ஒரு முக்கியக் காரணம். இன்றைய ஃபாஸ்ட் புட் உலகில் உணவுகளைப் போல நோயும் வேகமாக வருகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:
புத்துணர்ச்சியுடன் இருத்தல்
காலை உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைதிருத்திருகிறது. இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்பயிற்சியகம் அனைத்தின் மூலமும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
கட்டுப்பாடு :
காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். காலையில் செய்யும் உடற் பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
உணவு பழக்கவழக்கங்கள்
எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். சீரான உணவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று. செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
முன் குறிப்பீடு செய்தல்
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில் அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. அனைவரும் சுறுசுறுப்பான வேலை அட்டவனையை கொண்டுள்ளனர். எனவே உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற் பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற் பயிற்சி செய்ய மிகவும் அமைதியான நேரம்.

காலை உடற்பயிற்சி
காலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவிற்கு முன்னால் செய்யப்படுவது. வெறுவயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது மற்றும் இது காலை உணவிற்கு பிறகும், மத்திய உணவிற்கு பிறகும் செய்வதை விட மிகவும் ஏற்றது. காலை காற்று மிகவும் புத்துணர்ச்சி ஊட்ட கூடியது. இதில் ஆக்சிஜன் மற்ற நேரத்தை விட அதிகமாக உள்ளது. சூரியகதிரும் ஒரு நாளில் இருக்கும் மற்ற நேரத்தை விட காலையில் மிகவும் வைட்டமின் சத்துக்களை தருகிறது
காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைப்பாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும். மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. உடற்பயிற்சி, வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமையடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது.
உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் உருவாகும்.
இனி காலை உடற்பயிற்சியை முடிந்தால் வெட்டவெளியில் தொடங்கிடுங்கள்... ஆரோகியமாக வாழுங்கள்...
கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போது உடற்தசைகள் அதிகச் சூட்டை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பம் தசைகளில் இருந்து ரத்தம் மூலம் தோலுக்கு மாற்றப்படுகிறது. தோலில் உள்ள வியர்வை வெளியேற்றும் துளைகள் மூலமாக வெப்பம் வெளியேறி, காற்றில் கலக்கிறது. இதனால் பித்தஅளவு சமமாகி, உடல் குளிர்ச்சி அடைகிறது.
முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை. 10 நிமிட வார்ம் அப் பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10- 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
தீவிர நோய்களுக்கு உள்ளானவர்கள், 70 வயதைத் தாண்டியவர்கள், உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் மருத்துவ உலகில் நீண்டநாட்களாக இருந்து வருகிறது. கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மெனென்ட் போண்டனா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இதய செயலிழப்பு, டைப் 2- சர்க்கரை, பக்கவாதம் உள்ளிட்ட தீவிரநோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள்கூட மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்; இதன் மூலமாக நோயின் தாக்கம் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.