400-450 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் 'ஓலா எலெக்ட்ரிக்'
ஓலா எலெக்ட்ரிக் லாபத்தை அடைவதற்கான நிறுவனத்தின் இலக்கை விரைவுபடுத்தும் வகையில் பணிநீக்கத்தை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 400 முதல் 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கு வழக்கம் போல் நிறுவனத்தின் மறுகட்டுமானச் செயல்பாடு, என்று ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்ட செய்தி வட்டாரங்கள், அடுத்த மாதத்திலிருந்து இந்த ஆட்குறைப்பு நடைபெறும் என்று தெரிகிறது. இந்த பணி நீக்க விவகாரத்தை முதலில் ‘மணி கன்ட்ரோல்’ ஊடகம் வெளியிட்டது.
இப்போதெல்லாம் இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் புதிய பெயர் மறுகட்டுமானம் ஆகும். ஆனால், உண்மையில் லாப நோக்கத்திற்காகவே ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப் படுகின்றனர்.
பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் முதல் காலாண்டில் நிகர நட்டம் ரூ.324 கோடியிலிருந்து ரூ.495 கோடியாக அதிகரித்துள்ளது.
தற்போது எலக்ட்ரிக் டூவீலர் பிரிவில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம், தனது வாகனங்களை விற்க முடியாமல் திணறி வருகிறது. செப்டம்பரில், இந்த ஆண்டு இதுவரை மிகக் குறைவான வாகனங்களை விற்றது மற்றும் 2024ல் முதல் முறையாக அதன் சந்தைப் பகிர்மானம் 30% க்கும் கீழே சரிந்தது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில், Ola Electric இன் சந்தைப் பகிர்மானம் முந்தைய காலாண்டில் 49%-இல் இருந்து 33% ஆகக் குறைந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக நிறுவனத்தின் வாகன பழுது உள்ளிட்ட சேவைகளுக்கான திறன் பின்னடைவு கண்டு அது விற்பனையையும் பாதித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்திலும் தற்போது முன்னேறி வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மீதான வாடிக்கையாளர்கள் புகார்கள் அதிகரித்து வருகின்றன, மேலும், வாடிக்கையாளர் சேவையில் ஒழுங்குமுறைக்கான அதிகப்படியானக் கட்டுப்பாடுகளும் கேள்விகள் குறித்தும் வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த சிக்கல்கள் நிறுவனத்தின் பங்கின் விலையில் சிற்றலை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன, இது தற்போது அதன் அறிமுக விலையான ரூ.76-ஐ விட குறைவாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
உங்கள் பேராசைக்காக 660 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதா? - Freshworks நிறுவனத்தை சாடிய ஸ்ரீதர் வேம்பு!