65 வயதிலும் தளராத உறுதி; தினம் 25 கி.மீ. நடைப்பயணம் - ஓயாமல் டியூசன் எடுக்கும் நாராயணி டீச்சர்!
கடந்த 50 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்லும் நாராயணி டீச்சரின் அர்ப்பணிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான பயணம் இதோ...
கடந்த 50 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்லும் நாராயணி டீச்சரின் அர்ப்பணிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான பயணம் இதோ...
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்... கடவுளை விடவும் ஆசிரியர்கள் கொண்டாட்டப்பட வேண்டியவர்கள் என்பதை நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உணர்த்தி வருகின்றனர்.
சொந்த பணத்தில் ஏழை குழந்தைகளை படிப்பது, தனது சம்பளத்தில் ஏழை பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பாட புத்தகங்களை வாங்கிக்கொடுப்பது, தனது மாணவச் செல்வங்கள் பொது அறிவு பெறுவதற்காக வீட்டையே நூலகமாகவும், இலவச பயிற்சி மையமாகவும் மாற்றும் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம்.
இன்று 65 வயதிலும் தனது பகுதியில் உள்ள பிள்ளைகளுக்கு படம் சொல்லிக் கொடுப்பதற்காக 25 கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நாராயணி டீச்சர் கேரளாவின் மற்றொரு அடையாளமாக மாறியுள்ளார்.
தினமும் 25 கி.மீ. நடைபயணம்:
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் பகுதியைச் சேர்ந்த கே.வி.நாராயணி என்ற என்பவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் “நாராயணி டீச்சர்” என அழைக்கப்படுகிறார்.
65 வயதாகும் நாராயணி டீச்சரின் நாள் அதிகாலை 4.30 மணிக்கே தொடங்கிவிடுகிறது. நடந்தே சென்று காலை 6.30 மணிக்கு முதல் மாணவனின் வீட்டை அடைகிறார். அங்கிருந்து நடந்தே ஒவ்வொரு வீடாக சென்று டியூசன் எடுக்கும் நாராயணி டீச்சர், மீண்டும் நடந்தே இரவு நேரத்தில் வீடு திரும்புகிறார்.
தள்ளாத வயதிலும் தளராத மனதுடன் நாராயணி டீச்சர் பிள்ளைகளுக்கு வீடு, வீடாக சென்று டியூசன் சொல்லித் தரக்காரணம் அதன் மூலம் கிடைக்கும் கல்வி கட்டணத்தைக் கொண்டு தான் தனது வாழ்வாதாரத்தையும் வயது மூப்பு காரணமாக படுக்கையில் இருக்கும் அவரது கணவரையும் கவனித்து வருகிறார்.
தனது தினசரி உடற்பயிற்சி போல் கருதியே நடைப்பயணம் செய்வதாகக் கூறும் நாராயணி டீச்சர்,
”எனது உடல்நிலை அனுமதிக்கும் வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் பணியை தொடர்ந்து செய்வேன்,” என்கிறார்.
தற்போது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் நாராயணி டீச்சருக்கு, எப்படியாவது சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது.
தகவல் உதவி - பெட்டர் இந்தியா | தமிழில் - கனிமொழி
1 லட்சம் ஏழை மாணவர்கள் 5 கோடி ரூபாய் கல்வியுதவி பெற உதவிய 80 வயது ஆசிரியர்!